Thalapathy 68 - தளபதி 68 - விஜய் செய்யப்போகும் விஷயம் இதுதானா?.. லேட்டஸ்ட் தகவல் இதோ

சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68 படத்துக்காக விஜய் செய்யப்போகும் விஷயம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

பீஸ்ட் தோல்வி வாரிசு படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஷூட்டிங் முடியும் என கருதப்படுகிறது.

Two Getups to Vijay in Thalapathy 68 Movie

தளபதி 68: லியோவின் ஷூட்டிங் இன்னும் முடியாத சூழலில் விஜய்யின் 68ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தெலுங்கு இயக்குநர்தான் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு கமிட்டாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் கஸ்டடி படத்தின் ரிசல்ட் கொஞ்சம் அவர்களுக்கு பீதியையும் கொடுத்திருக்கிறது. ஆனால் வெங்கட் பிரபு மேக்கிங்கில் நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

விஜய் சம்பளம்: விஜய் 68 அறிவிப்பு வெளியானவுடன் பெரும்பாலானோர் லியோ படம் பற்றி பேசுவதையே மறந்துவிட்டனர். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு விஜய் வாங்கவிருக்கும் சம்பளம் தொடர்பாகத்தான் பலரும் பேசுகிறார்கள். அதன்படி விஜய்க்கு 175 கோடி ரூபாயிலிருந்து சம்பளம் கொடுக்க ஏஜிஎஸ் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. வெங்கட்பிரபுவுக்கு பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் என தெரிகிறது.

கதைக்களம் என்ன?: இதற்கிடையே எப்போதும் ஜாலி ஜானரில் படம் இயக்கும் வெங்கட் விஜய்யை வைத்து எந்த மாதிரியான ஜானரில் இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. படம் குறித்த அறிவிப்பு வீடியோவை வைத்து பலரும் பல விஷயங்களை யூகங்களாக கூறினர்.குறிப்பாக இந்தப் படம் அரசியல் கதைக்களத்தை கொண்டது. அதன் காரணமாகத்தான் விஜய் இதில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் என்றெல்லாம் பேசப்பட்டது.

Two Getups to Vijay in Thalapathy 68 Movie

படத்தின் பெயர்: இந்தச் சூழலில் எப்போது வித்தியாசமான முறையில் பெயரை வைக்கும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு சிஎஸ்கே என்று பெயர் வைக்கவிருப்பதாக சில நாட்களாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் அவ்வாறு வைப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்று திரை ஆர்வலர்களால் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் கதையானது தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ பிரச்னைதான் என்றும் புதிய தகவல் பேசப்படுகிறது.

விஜய் செய்யப்போகும் விஷயம்: இந்நிலையில் படத்தில் விஜய்யின் கெட்டப்புகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி படத்தில் அவர் இரண்டு கெட்டப்புகளில் வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அப்பா,மகனுக்கும் இடையே ஈகோ பிரச்னைதான் கதை என்று கூறப்பட்ட சூழலில் தற்போது விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் என கூறப்படுவதால் ஒருவேளை அப்பா கதாபாத்திரத்தையும் விஜய்யே செய்யப்போகிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X