சிவகார்த்திகேயனின் சிங்கப்பாதை படத்தில் இரண்டு கதாநாயகிகள்.. யார் தெரியுமா ?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
அடுத்ததாக இயக்குநர் அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு சிங்கப்பாதை என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மிக விரைவிலேயே சிங்கப்பாதை குறித்த பல தகவல்கள் வெளியாக இருக்க இப்பொழுது இந்த திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் சீரியசான கதாபாத்திரத்தில்
நடிகர் சிவகார்த்திகேயன் நெல்சன் கூட்டணியில் உருவான டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூலை அள்ளியது.
இதுவரை கலகலப்பான திரைப்படங்களில் தனது கவுண்ட்டர்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக மிகக் குறைந்த அளவிலேயே வசனங்களுடன் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது

டான் கல்லூரி கதை களத்தில்
இந்த நிலையில் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் டான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார்

அனிருத் இசையமைக்கிறார்
டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இந்த சூப்பர் காம்போ ஒருபுறம் இணைய மற்றொருபுறம் எஸ் ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி,ஆர் ஜே விஜய், சிவாங்கி, பாலசரவணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

இரண்டு கதாநாயகிகள்
டான் படம் மிக விரைவிலேயே திரையில் வெளியாக இருக்க அடுத்ததாக சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் அசோக் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கு சிங்கப்பாதை என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் கசிந்தன. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், தந்தை-மகன் என இரண்டு ரோல்கள் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தந்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவியும்,மகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











