2வது முறை ஒன்று சேரும் சிவா-அஜீத் படத்தில் 2 ஹீரோயின்கள்
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கும் படத்தில் 2 ஹீரோயின்களாம்.
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு அஜீத் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சிவா அஜீத்தை வைத்து எடுத்த வீரம் படம் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய படம் நகரத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாம். மேலும் படத்தில் 2 ஹீரோயின்களாம். அஜீத்துக்கு ஏற்ற ஹீரோயின்களை தேடும் பணி நடந்து வருகிறதாம்.
சிவா, அஜீத் இணையும் படத்தையும் என்னை அறிந்தால் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தான் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது. இதற்கிடையே குழந்தைகள் தினத்தன்று என்னை அறிந்தால் பட டீஸர் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று அஜீத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
டீஸர் வெளியிடப்படும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











