இரண்டு ஹீரோயின்களும்….108 பாடல்களும் …. அசத்தல் டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் தனது 'ஒருதலைக்காதல்' படத்திற்காக மதுரை மண்ணின் மைந்தராக ஆக்ரோசம் காட்டி நடித்துள்ளாராம்.
முதன் முதலாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் டி.ராஜேந்தருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனராம். இருவருமே மும்பை மாடல் அழகிகளாம்.
இந்தப் படத்திற்காக 108 பாடல்கள் வரை டியூன் போட்டு 7 பாடல்களை செலக்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்து கிலோ எடை குறைப்பு
வீராசாமி படத்திற்குப் பின்னர் டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு தலை காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக நடிக்க டி.ராஜேந்தர் பத்து கிலோ எடை குறைத்திருக்கிறார்.

மும்பை அழகிகள்
டி.ராஜேந்தருக்கு ஜோடியாக இரண்டு மும்பை அழகிகள் ஹீரோயினாக நடிக்கிறார்களாம். இருவரையும் தொடாமல் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மதுரை தமிழ்
படிக்காத மதுரை கிராமத்து இளைஞராக டி.ஆர் நடிக்கிறார். இதற்காக தனது பாணியில் மதுரை தமிழ் பேசியுள்ளார்.

கிராமத்து விவசாயி
கிராமத்தில் விவசாய வேலையே உயிர் மூச்சு என்று வாழ்கிறார் டி.ராஜேந்தர். அவரது முறைப்பெண்தான் அவருக்கு மனைவி என்று பெரியவர்கள் சொல்லி வளர்க்கிறார்கள்.

முறைக்கும் முறைப்பெண்
ஆனால் முறைப்பெண்ணோ பெரிய படிப்பு படித்துவிட்டு வந்து படிக்காத டி.ஆரை முறைத்துக் கொண்டே திரிவார். டிஆரோ அவரை ஒரு தலையாய் காதலித்து உருகிக் கொண்டு திரிவார்.

ஒரு தலைக் காதலி
அதே ஊரில் உள்ள கிராமத்து பெண் ஒருத்தி டி.ஆரை உருகி உருகி ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருப்பார். இதில் யார் யாரோடு சேர்கிறார்கள் என்பதுதான் கதை.

முதல் கிராமத்துப் படம்
இந்தப் படம் பற்றி கூறிய டி.ராஜேந்தர், இது நான் பண்ற முதல் கிராமத்து படம். என்னோட படம் என்றாலோ பாட்டுதான் முதல்ல நிக்கும். இந்தப் படத்திற்காக 108 டியூன்களைப் போட்டு. அதிலிருந்து 7 டியூன்களை செலக்ட் பண்ணி படத்துல யூஸ் பண்றேன்.

டி.ஆரும் தாடியும்
படத்துக்காக உடம்பையும், தாடியையும் டிரிம் பண்ணியிருக்கேன். இதுவரை 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஒரு நல்ல நாளில் படத்தை அதிரடியா ரிலீஸ் பண்ணுவேன்" என்கிறார் டி.ஆர்.

எல்லாமே டி.ஆர் தான்
மதுரை முத்து, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கிறார்கள். வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவை மட்டும் சாலை சகாதேவன் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











