விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’: லெட்சுமி மேனனோடு நடிப்பில் மோதும் இனியா!
சென்னை: திரு இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகிவரும் 'நான் சிகப்பு மனித'னில் இன்னொரு கதாநாயகியாக இனியா இணைந்துள்ளார்.
தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்கி வந்த நடிகர் விஷால், பாண்டியநாடு மூலம் வெற்றி வாகை சூடினார். விஷால். அதிலும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த இந்த படத்தை சொன்ன தேதியில் சரியான வெளியிட்டு நல்லதொரு தயாரிப்பாளராகவும் நிரூபித்தார் விஷால்.
இந்நிலையில், தனது அடுத்த படமான நான் சிகப்பு மனிதன் பட வேலையில் பிசியாகி விட்டார் விஷால். அப்படத்தின் கதாநாயகியாக லட்சுமிமேனன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது மற்றொரு நாயகியாக இனியா சேர்க்கப் பட்டுள்ளார்.

விஷால் நடிப்பில்...
நான் சிகப்பு மனிதன் படத்தையும் தானே தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார் விஷால். கூடவே யுடிவியும் தயாரிப்பில் அவருடன் கைகோர்த்திருக்கிறது.

மற்றொரு நாயகி...
இப்படத்தில் கதாநாயகியான லட்சுமிமேனன் தவிர இன்னொரு கதாபாத்திரத்திற்காக வாகை சூடவா, மெளனகுரு படங்களில் நடித்த இனியாவை இணைத்திருக்கிறார்கள்.

நல்ல நடிகை...
இப்படத்தின் டைரக்டரான திரு, படத்திற்கு இன்னொரு கதாநாயகி தேடிவந்தபோது, வாகை சூடவா மட்டுமின்றி அன்னக்கொடி படத்திற்காக எடுக்கப்பட்ட இனியாவின் புகைப்படங்கள் அவரை வெகுவாக பாதித்ததாம். அதனால், லட்சுமிமேனனுக்கு இணையாக நடிக்கத் தெரிந்த நல்ல நடிகை அவர் என்று இனியாவுக்கு இந்த வாய்ப்பினை கொடுத்திருக்கிறார்களாம்.

நல்ல வாய்ப்பு....
கதைப்படி படத்தில் லட்சுமி மேனனுக்கு அடுத்த இடம் தான் இனியாவுக்கு என்ற போதும், தமிழில் சறுக்கிக்கிடக்கும் தனது மார்க்கெட்டை சரி செய்ய இதை நல்லதொரு வாய்ப்பாக நினைத்து உடனடி சம்மதம் தெரிவித்து விட்டாராம் இனியா.

முக்கியக் கதாபாத்திரம்...
இப்படத்தில் இனியாவுக்கு தனிப் பாடல் காட்சி மட்டுமின்றி, நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல காட்சிகளும் நிறைய உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











