பட்டப்பகலில் கார்த்தி பட நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு

By Siva

Recommended Video

லீனாவுக்கு ஆபத்தா | ப்ளார் விட்ட ஜரீன் | புகைப்பிடிக்கும் அமலா- வீடியோ

கொச்சி: மலையாள நடிகை லீனா மரியா பாலுக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மலையாள நடிகை லீனா மரியா பால் கேரள மாநிலம் கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மேட் போட்ட இரண்டு பேர் அந்த பியூட்டி பார்லரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

சம்பவம் நடந்தபோது பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் பலர் இருந்துள்ளனர். நல்ல வேளை இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பைக்கில் வந்தவர்களில் ஒருவர் விட்டுச் சென்ற துண்டிச்சீட்டில் ரவி பூஜாரி என்று எழுதியிருந்தது.

லீனா

லீனா

மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரியின் உத்தரவின்பேரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது போன்ற எண்ணத்தை உருவாக்கி வைத்துள்ளனர். சம்பவம் நடந்தபோது லீனா ஊரில் இல்லை. மும்பை நிழல் உலக நபர்களிடம் இருந்து லீனாவுக்கு மிரட்டல் வருவதாக தகவல் வந்தது. ஆனால் இது தொடர்பாக எங்களிடம் யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரியாணி

பிரியாணி

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது லீனா திருவனந்தபுரத்தில் இருந்துள்ளார். அவர் பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே, கார்த்தி நடித்த பிரியாணி, ரெட் சில்லீஸ், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகேஷ்

சுகேஷ்

சுகேஷ் சந்திரசேகருடன் சேர்ந்து வங்கி மோசடி வழக்கில் சிக்கினார் லீனா மரியா பால். டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிக்கிய சுகேஷ் தற்பது திகார் சிறையில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X