கவின், ஆரவ் சொந்த ஊரில் இருந்து வரும் அடுத்த செலிபிரிட்டி.. பிக்பாஸில் பங்கேற்கும் ஹேண்ட்சம் பாய்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் ஆரவின் இடத்தை நிரப்பப் போகும் மற்றொரு செலிபிரிட்டியின் பெயர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil contestants two of them tested positive

பிக்பாஸ் சீசன் 4 குறித்த பேச்சு தான் தற்போது ஊடகங்களில் செம ஹாட் பாப்பிக்காக உள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெறுகிறது.

ஹோம் குவாரண்டைன்

ஹோம் குவாரண்டைன்

தேர்வு செய்யயப்பட்ட போட்டியாளர்களுக்கு கொரேனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாஸிட்டிவ் என ரிசல்ட் வரும் போட்டியாளர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். நெகட்டிவ் என ரிசல்ட் வரும் பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு ஹோம் குவாரண்டைனில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

6 பேர் உறுதி

6 பேர் உறுதி

அந்த வகையில் இரண்டு போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு என்று ரிசல்ட் வந்ததால் அவர்கள் நிகழ்ச்சி தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

சிங்கர் அஜித்

சிங்கர் அஜித்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு செலிபிரிட்டி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 டைட்டில் வின்னரான அஜித் தான் அது. இதற்கு முன்பு பங்கேற்ற போட்டியாளர்கள் ஆரவ் மற்றும் கவின் ஆகியோரின் சொந்த ஊரான திருச்சியை சேர்ந்தவர்தான் இந்த அஜித்.

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

இதேபோல் நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியின் பெயரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளது. சனம் ஷெட்டி பல படங்களில் நடித்துள்ளார். கடந்தே சீசனில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலமான தர்ஷனின் முன்னாள் காதலியாவார் சனம் ஷெட்டி. இந்நிலையில் சனம் ஷெட்டியும் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

ஏற்கனவே பிக்பாஸில் பங்கேற்க போவதாக பல பிரபலங்களின் பெயர்கள், அடிபட்டு வந்தது. இந்நிலையில் உறுதி செய்யப்பட்ட பிரபலங்கள் என சில எதிர்பாராத பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

தற்போது வரை

தற்போது வரை

மொத்தம் 12 பிரபலங்கள் மட்டுமே இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுவரை 8 பிரபலங்களின் பெயர்கள் உறுதியாகியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுக்கு பிறகு மற்ற போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X