சஞ்சனா, ராகிணி கைது செய்யப்பட்ட வழக்கு.. தகவல்களை கசிய விட்டதாக உதவி கமிஷனர் திடீர் சஸ்பெண்ட்!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் தகவல்களை கசியவிட்டதாக உதவி போலீஸ் கமிஷனர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திரஜித் லங்கேஷ்
கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகிணி திவேதி
இதையடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்கள் நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்
இதில் மற்றொரு கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய், அவர் கணவரும் நடிகருமான திகாந்த் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்கள், தாங்கள் பார்ட்டிகளுக்கு சென்றது உண்மை என்றும் ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும் கூறினர்.

பரப்பன அக்ரஹாரா
இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியும் சஞ்சனா கல்ராணியும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் ஜாமின் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை தகவல்கள்
இதற்கிடையே இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் கூட்டாளிகளுக்கு விசாரணை பற்றிய தகவல்களை கசிய விட்டதாக உதவி போலீஸ் கமிஷனர் முதவி (Mudhavi), பெண்கள் பாதுகாப்புப் பிரிவு, தலைமை காவலர் மல்லிகார்ஜுன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











