twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல சினிமா நிச்சயம் வெற்றி பெறும்

    |

    கோவா : கோவாவிற்கு செல்லும் இரு தமிழ் படங்கள் தமிழில் நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மற்றும் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் நவம்பர் மாதம் நடக்க உள்ள சர்வதேச கோவா பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது .

    அந்த பட விழாவில் 200க்கும் அதிகமான உலக சினிமாக்கள் திரையிட உள்ளன .இந்திய சினிமாக்கள் 26 படம் வரை திரையிட உள்ளன அதில் தமிழில் ஒத்த செருப்பு சைஸ் 7 மற்றும் ஹவுஸ் ஓனர் , மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, கோளாம்பி,,கல்லிபாய்,சூப்பர்30 ஆகிய படங்கள் திரையிட உள்ளன .

    two tamil films participating in goa film festival

    கடந்த ஆண்டு கோவா திரை பட விழாவில் பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிட பட்டு விருது வென்றது . ஒத்த செருப்பு சமீபத்தில் தமிழில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    பார்த்திபன் இயக்கி நடித்திருந்த படத்தில் பார்த்திபனை தவிர வேறு யாரும் கிடையாது ஒற்றை கதாபாத்திரத்தை மய்யமாக கொண்டு எடுக்க பட்ட படம் இதை தயாரித்தும் இருந்தார் பார்த்திபன் . மற்றொரு படமான ஹவஸ் ஒனர் படம் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியது இதில் பொல்லாதவன் கிஷோர்,ஶ்ரீரஞ்சினி,பசங்க கஷேர் ஆகியோர் நடிந்திருந்தனர் சென்னையில் 2015 வந்த வெள்ளத்தை மய்யமாக வைத்து இயக்கபட்ட படம்.

    லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மணி என்ற படத்தை இயக்கி இருந்தார் அதற்கு பின் எடுத்த இப்படம் வெற்றி பெறாவிட்டாலும் விமர்சகர்கள் இடையே நல்ல பாரட்டை பெற்றது .

    இப்படத்தில் நான் நடிக்கவே இல்லை.. சாமந்தியாக வாழ்ந்திருக்கிறேன்.. 'மிக மிக அவசரம்' ஸ்ரீ பிரியங்கா! இப்படத்தில் நான் நடிக்கவே இல்லை.. சாமந்தியாக வாழ்ந்திருக்கிறேன்.. 'மிக மிக அவசரம்' ஸ்ரீ பிரியங்கா!

    கோவாபட விழாவில் இந்த வருடம் அமிதாப் பச்சனுக்கு -விருது வழங்கி கவுரவிக்கபட உள்ளார்.

    பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கும் இந்த கோவா பிலிம் பெஸ்டிவல் ஒவ்வொரு ஆண்டும் சினிமா ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறது .
    வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோவா சென்று இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    சினிமாவில் கஷ்டப்படும் நிறைய திறமைசாலிகள் - இப்படி பட்ட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை மட்டுமே படுகிறார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. சில சமயங்களில் சில கல்லூரிகள் மாணவர்களை ஊக்க படுத்தும் விதமாக , நல்ல சினிமாவை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பல புதிய திட்டங்கள் கொண்டு வந்து - ரயில் டிக்கெட்டுகளை அவர்களுக்கு இலவசமாக கொடுத்து , தங்க வசதி செய்தும் கொடுக்கின்றன .

    கோவா என்றால் கேளிக்கை மட்டும் தான் , டூரிசம் மட்டும் தான் ஜீவாதாரம் என்ற நிலை ஒரு பக்கம் இருக்க , நல்ல சினிமாவையும் நல்ல ரசனை உள்ள ரசிகர்களையும் ஒன்று திரட்டி இங்கு தான் காண முடியும் என்று ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    இப்படி பட்ட அரங்கில் நம் தமிழ் சினிமாவும் பல அடையாளங்களை ஏற்படுத்தி வெற்றி பெறுகிறது என்பது தமிழனுக்கு கிடைத்த பெருமை. வெற்றி பெட்ர திறமைசாலிகளை , நம் தமிழர்களை பூமியில் எங்கு இருந்தாலும் இணையத்தளம் மூலம் பாராட்டுகளை தெரிவிப்போம்.

    English summary
    Every year goa film festival happens and its one of the top most film festivals of india. different language films being screened and honored and this year 2 of our tamil films are also there. its a proud moment for each tamilian.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X