பிருத்விராஜ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து 2 மாஸ் அப்டேட்: ‘தீர்ப்பு’ டீசர், ‘கடுவா’ ஓடிடி ரிலீஸ்!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் டாப் ஸ்டார் பிருத்விராஜ்ஜின் 2 படங்கள் குறித்து சூப்பரான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிருத்விராஜ்ஜின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'கடுவா' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், 'கடுவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும், அவரது அடுத்த படத்தில் இருந்து ஒரு சூப்பர் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

டைரக்டர் பிருத்விராஜ்

டைரக்டர் பிருத்விராஜ்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் பிருத்விராஜ், 'லூசிபர்', 'ப்ரோ டேடி' என இருபடங்களையும் இயக்கியுள்ளார். இந்த 2 படங்களிலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இதில், 'லூசிபர்' ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு, வசூலிலும் சாதனைப் படைத்தது. இப்போது 'லூசிபர்' படம், தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான் கான் நடிப்பில் 'காட்ஃபாதர்' என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்படுகிறது.

சூப்பர் ஹிட் கடுவா

சூப்பர் ஹிட் கடுவா

இரண்டு படங்களை ஹிட் கொடுத்தாலும், பிருத்விராஜ்ஜை நடிகராக திரையில் பார்ப்பதேற்க அவரது ரசிகர்கள் விருப்பம் கொள்கின்றனர். அப்படி வெயிட்டிங்கில் இருந்தவர்களுக்கு 'கடுவா' படம் மூலம் சூப்பர் ட்ரீட் கொடுத்தார் பிருத்விராஜ். பண்ணையாளரான கடுவாகுன்னேல் குறியாச்சனுக்கும், அரசியல் அதிகார பலம் கொண்ட காவல்துறை ஐஜி ஜோசப் சாண்டிக்கும் இடையிலான முட்டலும் மோதல்களும் தான் படத்தின் கதை. கடுவான்குன்னேல் பாத்திரத்தில் பிருத்விராஜ்ஜும், ஐஜி கேரக்டரில் விவேக் ஓப்ராயும் நடித்திருந்தனர்.

அமேசானில் ரிலீஸ்

அமேசானில் ரிலீஸ்

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட 'கடுவா' மூவி, ஆக்சன் ஜானரில் ரசிகர்களை பரவசப்படுத்தியது. இதனிடையே, படத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்த காட்சியும் வசனமும் சர்ச்சையாக, மொத்த படக்குழுவும் உடனே மன்னிப்பும் கேட்டது தனிக்கதை. திரையரங்குகளில் மாஸ் காட்டிய 'கடுவா' அமேசான் ஓடிடியில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாகிறது.

தீர்ப்பு டீசர்

தீர்ப்பு டீசர்

இந்நிலையில், பிருத்விராஜ் படத்தின் புதிய அப்டேட்டும் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'தீர்ப்பு' படத்தின் டீசர் தான் அது. பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாறன், சைஜு குரூப், விஜய் பாபு, இஷா தல்வார் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், மிஸ்டரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான 'தீர்ப்பு' படத்தின் டீசர், பித்விராஜ்ஜின் வாய்ஸ் ஓவரில் மிரட்டலாக உருவாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

'தீர்ப்பு' படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், நிச்சயமாக இந்தப் படம் ஹிட் அடிக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல் படமும் சஸ்பென்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. திரையரங்குகளில் ஹிட் அடித்த 'கடுவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி, 'தீர்ப்பு' படத்தின் டீசர் என, அடுத்தடுத்து இரண்டு டபுள் தமாக்கா ட்ரீட்டால், பிருத்விராஜ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X