''இங்கி பிங்கி பாங்கி''.. நயந்தாரா, ஆண்ட்ரியா வேண்டாம்... யு ஆர் மை டார்லிங் ஹன்சிகா!!

சென்னை: தனது பிறந்தநாளான நேற்று முந்தினம் தனது வாலு படப் பாடலான 'யு ஆர் மை டார்லிங்' பாட2ல் டீசரை வெளியிட்டு, அதனைத் தனது அன்புக் காதலி ஹன்சிகாவுக்கு டெடிகேட்டும் செய்துள்ளார் சிம்பு.

அப்பாடலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா..? அப்பாடலை தன் சொந்தக் குரலில் பாடியுள்ளார் சிம்பு. 'நயந்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம்... யு ஆர் மை டார்லிங்' என ஹன்சிகாவைப்புகழ்ந்து அப்பாடலின் வரிகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஏற்கனவே சிம்புவும், ஹன்சிகாவும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், சமீபத்திய சம்பவங்களால் இருவருக்குள்ளும் இடைவெளி உண்டாகி விட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு இந்தப் பாடல் டீசர் வெளியீடும், சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் பதிலாக அமைந்து விட்டது.

காதல் மன்னன்...

காதல் மன்னன்...

சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் ஜோடியாக 'வாலு' மற்றும் வேட்டைமன்னன் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாகவும் சில வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் இருவரும் அறிவித்துள்ளனர்.

காதலில் விரிசலா..?

காதலில் விரிசலா..?

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளனர். முன்னாள் காதலியான நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் ஹன்சிகா கோபமாகி இருப்பதாகவும். இதனால் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

பெர்த்டே கிப்ட்....

பெர்த்டே கிப்ட்....

இதற்கிடையே தனது வாலு படத்தில் நயந்தாரா மற்றும் ஆண்ட்ரியாவை திட்டி ஹன்சிகாவைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடியிருந்தார் சிம்பு. இப்பாடலின் டீசர் கடந்த 3ம் தேதி, சிம்புவின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப் பட்டுள்ளது.

யு ஆர் மை டார்லிங்....

யு ஆர் மை டார்லிங்....

இப்பாடலில், நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம் யு ஆர் மை டார்லிங்' என ஹன்சிகாவைக் குறிப்பிட்டுள்ளார் சிம்பு. படத்தில் ஹன்சிகாவை பார்த்து சிம்பு பாடுவது போல் இந்த பாடலை படமாக்க உள்ளனர்.

பிங்கி பிங்கி பாங்கி....

பிங்கி பிங்கி பாங்கி....

மேலும், இப்பாடலில் மணிரத்னம், பாலா, ஷங்கர் உள்ளிட்ட டைரக்டர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதன் பல்லவி ‘இங்கி பிங்கி பாங்கி' என துவங்குகிறது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் எழுதி உள்ளார்.

சர்ப்ரைஸ்....இதற்கிடையே சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து தங்கள் காதல் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை ஹன்சிகா வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X