ரஜினிகாந்த் விவகாரம் இருக்கட்டும்... முதல்ல இந்த கஜினிகாந்துக்கு என்னாச்சுன்னு பாருங்க!
ஆர்யாவின் கஜினிகாந்த் படத்துக்கு யு சான்று கிடைத்துள்ளது.
Recommended Video

கஜினிகாந்த்: அடல்ட் காமெடி படத்திற்கு ரஜினி கெட்டப்பா, என்ன கொடுமை சார் இது?..வீடியோ
சென்னை: ஆபாச பட இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்துக்கு சென்சார் போர்டு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் மூன்றாவது படம் கஜினிகாந்த். ஆர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சாயிஷா நாயகியாக நடித்துள்ளார்.

ஸ்டூடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி இசை அமைத்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், தணிக்கை குழுவில் இப்படத்திற்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் முந்தைய இரண்டு படங்களுக்கும் தணிக்கை குழுவில் ஏ' சான்றிதழே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











