கப்பல் படத்துக்கு 'யு' சான்றிதழ்!

By Shankar

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வழங்கும் கப்பல் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

தன் உதவியாளர் கார்த்திக் இயக்கியிருக்கும் ‘கப்பல்' படத்தை எஸ் பிக்சர்ஸ் மூலம் வெளியிடுகிறார் ஷங்கர். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த ஷங்கர், கப்பல் படம் சிரிப்பு கலவரமாக அமைந்துள்ளது என்றும், ஆரம்பம் முதல் படம் முடியும் வரை பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கரால் மிகச் சிறந்த படம் என பாராட்டு பெற்ற இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் மிகவும் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பாராட்டின் உடனடி பரிசாக படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல நகைச்சுவைக்கு கிடைத்த சான்றிதழ் இது என்ற மகிழ்ச்சியுடன் தயாரிப்பாளர்கள் 'கப்பல்' படத்தை இந்த மாதம் 25 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் கடைசியில் வெளிவரும் இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தில் நீங்கா இடம் பெறும் என நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர். கப்பல் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X