'அரசியல்வாதி' விஜய் ஆன்டனியின் எமனுக்கு யு!
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்து விரைவில் வரவிருக்கும் எமன் படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
"எமன் திரைப்படம் யு சான்றிதழை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு கதாநாயகன் விஜய் ஆண்டனி. தரமான கதையம்சங்கள் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் அவருடைய சிறப்பம்சம், எங்களின் 'எமன்' படம் 'யு' சான்றிதழை பெறுவதற்கு பக்கபலமாய் இருந்தது. தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு திரைப்படமாக எங்களின் 'எமன்' இருக்கும்," என்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.

இந்தப் படத்தில் முதல் முறையாக அரசியல்வாதியாக நடித்துள்ளார் விஜய் ஆன்டனி. நாடு இப்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், இந்த வாரமே படத்தை வெளியிடுகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications