'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா!

சமந்தா நடித்துள்ள யூ டர்ன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை சமந்தா, நடிகர்கள் ஆதி, நரேன் நடித்துள்ள யூ டர்ன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வி.ஒய். கம்பைன்ஸ், ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ், பி.ஆர்.8 கம்பைன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் யூ டர்ன். சித்தார்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற லூசியா படத்தை இயக்கிய பவன் குமார் தான் இப்படத்தின் இயக்குனர்.

ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே சுமார் 40 ஆயிரம் பேர் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர்.

மிரட்டல் டிரெய்லர்

யூ டர்ன் படத்தின் டிரெய்லர் மிரட்டலாக இருக்கிறது. முதல் காட்சியில் ஒரு பார் கவுண்டரில் கையில் முகத்தை வைத்து சாய்ந்திருக்கும் சமந்தா, திடீரென விழித்து 'நான் இங்க இப்படி உட்காந்திருப்பேன்னு நினைக்கவே இல்ல... கடந்த 5 நாட்களா என் வாழ்க்கையில நடந்தது உண்மையா' என புலம்புகிறார்.

புலம்பும் சமந்தா

புலம்பும் சமந்தா

அதைத்தொடர்ந்து வேளச்சேரி ரயில்வே பாலத்தில் நடக்கும் விபத்துகளை பற்றி போலீஸ் அதிகாரி ஆதியிடம் தகவல் கேட்கிறார். 'ஏன் இந்த கொலைய பண்ண' என்று சமந்தாவிடம் கேட்கிறார்கள். அதற்கு 'நான் எதுவும் பண்ணல' என்கிறார் சமந்தா.

சமந்தா ஹேர்ஸ்டைல்

சமந்தா ஹேர்ஸ்டைல்

டிரெய்லரை பார்க்கும் போதே இப்படம் லூசியாவை போலவே சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பது தெளிவாகிறது. இதில் சமந்தா பாய்கட் ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். நிச்சயம் இது டிரென்டிங்காகும் என எதிர்பார்க்கலாம்.

குளியலறை காட்சி

குளியலறை காட்சி

டிரெய்லரிலேயே குளியலறை காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. சமந்தா ஷவரில் குளிக்கும் காட்சியும், பின்னர் டவலை கட்டிக்கொண்டு ஹேர் டிரையரில் முடியை காய வைக்கும் காட்சியும் அவரது ரசிகர்களை குதூகலபடுத்துகிறது.

கிளாமர் இமேஜ்

கிளாமர் இமேஜ்

திருமணம் ஆன பிறகும் தனது கிளாமர் இமேஜ் கெடாமல் பார்த்துக்கொள்கிறார் சமந்தா. இது இந்த டிரெய்லர் மூலம் உறுதியாகி இருக்கிறது.

ஆங்கில நாவலை தழுவிய படமா

ஆங்கில நாவலை தழுவிய படமா

யூ டர்ன் டிரெய்லரே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. அதேநேரம் இந்த டிரெய்லலை பார்க்கும் போது சிட்னி ஷெல்டனின் எழுதிய நாவல் ஒன்று தான் நியாபகத்துக்கு வருகிறது. விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X