விஷால் -ஆர்யா மிரட்டும் எனிமி படம்... அடுத்த அப்டேட் தயார்!

சென்னை : நடிகர் விஷால் -ஆர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் எனிமி.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்கு படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

விஷால் -ஆர்யா

விஷால் -ஆர்யா

நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா திரைத்துறையை தாண்டி தனிப்பட்ட முறையில் நண்பர்களாக உள்ளனர். சமீபத்தில் ஆர்யாவிற்கு குழந்தை பிறந்ததை ட்விட்டர் மூலம் கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்தினார் விஷால். மேலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

எனிமி படம்

எனிமி படம்

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்துள்ளனர். படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கான பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுப்பட்டுள்ளனர். படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இவர் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர். இந்நிலையில் தற்போது கோலிவுட்டின் முக்கிய இரு ஹீரோக்களை இவர் இயக்கியுள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம் சிறப்பான விமர்சனங்ளை பெற்றுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் உடலை ஏற்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. இந்நிலையில் தற்போது எனிமி படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இரு இசையமைப்பாளர்கள்

இரு இசையமைப்பாளர்கள்

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும் ஆர்யாவிற்கு மம்தா மோகன்தாஸும் ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் தமனும் பின்னணியை சாம் சிஎஸ்ஸும் என இரு இசையமைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை தூக்கியுள்ளது.

சமமான கேரக்டர்கள்

சமமான கேரக்டர்கள்

இதற்கேற்றாற்போல படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு சிறப்பாக அமைந்தது. மேலும் இரண்டு சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் ஹீரோவாகவும் ஒருவர் வில்லனாகவும் நடிப்பது எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆயினும் படத்தில் இருவருக்கும் சமமான கேரக்டர்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யூஏ சான்றிதழ்

யூஏ சான்றிதழ்

இந்நிலையில் படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ள இந்தப் படம் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களுடன் மோதவுள்ளது. இந்த ரேசிலிருந்து மாநாடு படம் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X