பாண்டிய நாடு படத்துக்கு யுஏ... விஷால் ஷாக்.. மறு தணிக்கைக்கு முயற்சி!

By Shankar

சென்னை: விஷாலின் பாண்டிய நாடு படத்துக்கு யு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்காத விஷால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளார்.

விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாண்டிய நாடு'. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப் படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது, தியேட்டர்கள் லிஸ்டும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

தீபாவளிக்கு குறைந்தது ஒரு வாரம் முன்பே படங்களின் தணிக்கைச் சான்றிதழைத் தரவேண்டும் என அனைத்து திரையரங்குகளும் கோரிக்கை விடுத்திருந்தன. எனவே படத்தை முன்கூட்டியே தணிக்கை செய்து வருகின்றனர்.

UA for Vishal's Pandiya Naadu

ஆரம்பம் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்கு கடந்த வாரமே தணிக்கை முடிந்து யு சான்றும் கிடைத்துவிட்டது.

ஆனால் பாண்டியநாடு படத்துக்கு நேற்றுதான் தணிக்கை நடந்தது. இந்தப் படத்துக்கு யுஏ சான்று அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் என்பதால் இந்த சான்று.

இதனை விஷாலும் படக்குழுவும் ஏற்கவில்லை. காரணம் யு ஏ சான்றிதழ் பெற்றால் டிவியில் ஒளிபரப்புவது கஷ்டம். வரிவிலக்கும் கிடைக்காது. எனவே மறு தணிக்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X