கோல்டன் விசா.. நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம்.. டிரெண்டாகும் புகைப்படம்!

சென்னை: இந்திய நடிகர்கள் பலருக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை கொடுத்து வருகிறது.

Recommended Video

Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்டவர்களுக்கும், நடிகை த்ரிஷா, விஜய்சேதுபதி, அமலா பால், பார்த்திபன், ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கும் இதுவரை கோல்டன் விசாவை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கும் தற்போது கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா

கோல்டன் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தில் திறமை வாய்ந்த வெளிநாட்டவர்களையும் சினிமா பிரபலங்களையும் குடிமக்களாக மாற்ற அந்நாட்டு அரசு கோல்டன் விசாவை தாராளமாக வழங்கி வருகிறது. 10 ஆண்டுகள் அந்த நாட்டின் குடிமக்களாக வாழ வழங்கப்படும் கோல்டன் விசாவை பெற பாலிவுட் நடிகர்கள், கேரள நடிகர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் மத்தியில் பெரும் போட்டி எழுந்துள்ளது.

அண்ணாச்சி ஹீரோயின்

அண்ணாச்சி ஹீரோயின்

இந்தியாவிலேயே இளம் நடிகையான ஊர்வசி ரவுத்தேலாவுக்கு கடந்த ஆண்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இப்படியொரு பெருமை தனக்கு கிடைத்திருப்பது சந்தோஷத்தை அளித்துள்ளது என தி லெஜண்ட் படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

முதல் தமிழ் நடிகை

முதல் தமிழ் நடிகை

மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, அமலா பால் உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில், இந்த விருதை பெரும் முதல் தமிழ் நடிகை நான் தான் என த்ரிஷா கோல்டன் விசாவை பெற்ற புகைப்படங்களை ஷேர் செய்து தனது உற்சாகத்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கமலுக்கு கோல்டன் விசா

கமலுக்கு கோல்டன் விசா

இந்தியாவை தாண்டி உலகளவில் சினிமா மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்கிற முனைப்புடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசனுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் ஷேர் ஆகி வருகின்றன. சிம்பிளா ஒரு டிசர்ட் அணிந்து கொண்டு கமல் அந்த விசாவை பெற்றிருக்கிறார்.

400 கோடியை கடந்து

400 கோடியை கடந்து

விக்ரம் திரைப்படம் 400 கோடியை உலகளவில் கடந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. புதிதாக வந்த எந்தவொரு படமும் விக்ரம் படத்தை வீழ்த்தும் அளவுக்கு இல்லாத நிலையில், இந்த வாரம் வெளியாக உள்ள கடுவா, ராக்கெட்டரி உள்ளிட்ட படங்கள் விக்ரம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களை முழுமையாக ஆக்கிரமிக்குமா? என்பது இந்த வார கடைசியில் தெரிந்து விடும். வரும் ஜூலை 8ம் தேதி விக்ரம் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X