twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தஞ்சை பெரிய கோயில் பற்றி ஜோதிகா ஏன் அப்படி பேசினார்....நீண்ட விளக்கம் தந்த டைரக்டர்

    |

    சென்னை : ஜோதிகா தற்போது உடன்பிறப்பே படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் ஜோதிகா மற்றும் சசிக்குமார் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கிறார்கள். உடன்பிறப்பே உள்ளிட்ட 4 படங்களை சூர்யாவின் 2டி என்டர்டைன்சென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

    வேம்புலி மனைவி முதல் சூரரைப் போற்று பொம்மி வரை.. ஓணம் சேலையில் வசீகரிக்கும் நடிகைகள்!வேம்புலி மனைவி முதல் சூரரைப் போற்று பொம்மி வரை.. ஓணம் சேலையில் வசீகரிக்கும் நடிகைகள்!

    அடுத்த 4 மாதங்களில் வரிசையாக 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் 4 படங்களை அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சூர்யா சமீபத்தில் தான் அறிவித்தார். ஜெய் பீம், உடன்பிறப்பே, ஓ மை டாக், ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களில் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளன.

    சர்ச்சையான ஜோதிகாவின் பேச்சு

    சர்ச்சையான ஜோதிகாவின் பேச்சு

    இந்நிலையில் 2020 ம் ஆண்டின் தொடக்கத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, மருத்துவமனைகளுக்கு நிதியுதவி வழங்வதை வலியுறுத்தி பேசினார். அப்போது தஞ்சை பெரிய கோயில் பற்றிய அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஆக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

    அப்படி என்ன தான் பேசினார்

    அப்படி என்ன தான் பேசினார்

    விழாவில் பேசிய ஜோதிகா, பெரிய கோயில்களுக்கு டொனேஷன் வழங்குவதை போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் டொனேஷன் வழங்கினால், கோயில்களை போல் அவற்றையும் நன்கு பராமரிக்க முடியும். கோயில்களில் கவனம் செலுத்துவதை விட மருத்துவமனைகள் மீது கவனம் செலுத்துவது தான் முக்கியம் என்றார். கோயில்களை பற்றி பேசுகையில் தஞ்சை பெரிய கோயிலை உதாரணம் காட்டி பேசினார்.

    விளக்கம் தந்த டைரக்டர்

    விளக்கம் தந்த டைரக்டர்

    ஜோதிகாவின் இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஜோதிகாவின் பேச்சுக்கு அவரது கணவரும் நடிகருமான சூர்யா, விஜய் சேதுபதி போன்ற சிலர் அப்போது ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ஜோதிகா நடிக்கும் உடன்பிறப்பே பட டைரக்டர் இரா சரவணன், ஜோதிகா ஏன் அப்படி பேசினார் என மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

    மருத்துவமனை சென்ற ஜோதிகா

    மருத்துவமனை சென்ற ஜோதிகா

    இரா.சரவணன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், உடன்பிறப்பே ஷுட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா, தஞ்சையில் உள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அப்போது கர்ப்பிணி பெண்கள், கையில் குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் அங்கே நீண்ட வரிசையில் காத்திருப்பதை கண்டார். பிரசவம் முடிந்த அடுத்த நாளே பிறந்த குழந்தையுடன், ஒரு பெண் தரையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    சும்மா பேசவில்லை

    சும்மா பேசவில்லை

    அரசு மருத்துவமனைகளின் இந்த நிலையை பார்த்து மிகுந்த வேதனை அடைந்த அவர் வெறுமனே பேசுவதுடன் நிறுத்தாமல், மருத்துவமனையில் தேவையான வசதிகளை செய்ய ரூ.25 லட்சத்தை நன்கொடையாக கொடுத்தார். ஜோதிகாவின் பேச்சு வைரலான பிறகு தான் மருத்துவமனையை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    என்னவெல்லாம் நடந்திருக்கு

    என்னவெல்லாம் நடந்திருக்கு

    மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. மருத்துவமனையை சுற்றி கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, புதர் மண்டிக் கிடந்த பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை டீனே நேரில் சென்று சீரமைப்பு பணிகளில் நேரடியாக கண்காணித்துள்ளார். அதோடு மருத்துவமனையை சுத்தம் செய்த போது அங்கிருந்து 12 க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நல்ல மாற்றங்களும் ஜோதிகாவின் பேச்சால் தான் நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் இரா சரவணன்.

    வைரலான ஸ்டில்ஸ்

    வைரலான ஸ்டில்ஸ்

    ஜோதிகா தற்போது நடித்து வரும் உடன்பிறப்பே படத்தில் ஸ்டில்கள் ஆகஸ்ட் 19 ம் தேதி சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. முற்றிலும் கிராமத்து கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அடுத்தடுத்த 4 பட ரிலீஸ்

    அடுத்தடுத்த 4 பட ரிலீஸ்

    2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் 4 படங்களில் முதல் படைப்பாக ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து உடன் பிறப்பே அக்டோபர் மாதமும், ஜெய் பீம் நவம்பர் மாதமும், ஓ மை டாக் டிசம்பர் மாதமும் வெளியிடப்பட உள்ளன.

    English summary
    udanpirapae movie director era saravanan clarifies jyothika's controversial speech on thanjavur temple. he also list out the good things happened after jyothika's speech.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X