10 மில்லியன் வியூக்களை தாண்டிய உடன்பிறப்பே ட்ரெயிலர்... செம மாஸ்!

சென்னை : நடிகர் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே.

ஜோதிகாவின் 50வது படமான உடன்பிறப்பே அமேசான் பிரைமில் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது.

நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நாயகியாக நடித்துள்ள அனைத்து படங்களிலும் இவரது கேரக்டர் பேசும்படியாக இருக்கும்.

சிறப்பான படங்களில் ஜோதிகா

சிறப்பான படங்களில் ஜோதிகா

அதிகமான முகபாவனைகளை இவர் வெளிப்படுத்துவதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட காலகட்டமும் உண்டு. இந்நிலையில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து செட்டில் ஆன ஜோதிகா, சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் சிறப்பான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

50வது படம் உடன்பிறப்பே

50வது படம் உடன்பிறப்பே

திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த 36 வயதினிலே படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தன்னுடைய ஹோம் பேனரில் தற்போது உடன்பிறப்பே என்ற படத்தில் ஜோதிகா நடித்து முடித்துள்ளார். இது இவரது 50வது படமாக அமைந்துள்ளது. இந்தப் படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.

ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியீடு

அமேசான் பிரைமில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது. இதேபோல படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது 10 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

இமான் இசை

இமான் இசை

இதே போல படத்தின் அண்ணே யாரண்ணே பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது அந்தப் பாடலும் ஒரு மில்லியன் வியூக்களை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் இரண்டாவது சிங்கிள் ஒத்தப்பனை காட்டேரியும் வெளியாகி உள்ளது. இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சகோதரப் பாசம்

சகோதரப் பாசம்

நடிகர் சசிக்குமார் மற்றும் ஜோதிகா இந்தப் படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். சகோதர பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அண்ணன் -தங்கை உறவின் மேன்மையை விளக்கும் மற்றுமொரு படமாக இது அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜோதிகாவின் 50வது படமான இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X