உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட படம்... உடன்பிறப்பே படம்... வீடியோ பாடல் வெளியீடு!

சென்னை : நடிகர் சசிக்குமார், ஜோதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் உடன்பிறப்பே.

Recommended Video

Udanpirappe Review by Poster Pakiri | Jyothika | Sasikumar | Samuthirakani | Filmibeat Tamil

அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்திய இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் எங்கே என் பொன்மாலை வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே படம்

உடன்பிறப்பே படம்

நடிகர் சசிக்குமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் உடன்பிறப்பே. சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இரா சரவணன் இயக்கம்

இரா சரவணன் இயக்கம்

அண்ணன் மற்றும் கணவனுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது. இரா சரவணன் இயக்கத்தில் வெளியான படத்திற்கு இசையமைத்திருந்தார் இமான். அவரது இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ஜோதிகா 50வது படம்

ஜோதிகா 50வது படம்

ஜோதிகாவின் 50வது படமாக வெளியான இந்தப் படத்தில் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவரும்வகையில் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருந்தன. குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசம்

பாசமலர் துவங்கி கோலிவுட்டின் அழிக்க முடியாத சென்டிமெண்டான அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. படத்தில் இதை உணர்த்தும்வகையில் காட்சிகள் இல்லாவிட்டாலும் ஜோதிகா மற்றும் சசிக்குமார் இடையிலான பாசம் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 தஞ்சாவூர் பெண்ணாக ஜோதிகா

தஞ்சாவூர் பெண்ணாக ஜோதிகா

படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் அண்ணனின் பாசத்தையும் மறுபக்கம் கணவனையும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கேரக்டராகவும் மாறியுள்ளார் ஜோதிகா. தஞ்சாவூர் பெண்ணாகவே படத்தில் தோற்றமளிக்கிறார்.

வீடியோ பாடல் வெளியீடு

வீடியோ பாடல் வெளியீடு

இதனிடையே, இந்தப் படத்தின் வீடியோ பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகிவரும் நிலையில், எங்கே என் பொன்மாலை என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலின் காட்சியமைப்புகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. படத்தை பார்க்கும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X