இரண்டே நாளில் 5 மில்லியன் பார்வையாளர்கள்.. உடன்பிறப்பே டிரைலரை வைரலாக்கும் ரசிகர்கள்!
சென்னை : உடன்பிறப்பே டிரைலர் வெளியான இரண்டே நாளில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஜோதிகாவின் 50வது திரைப்படமான உடன்பிறப்பே அமேசான் ஓடிடியில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதில் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார்.

ஜோதிகா
நடிகை ஜோதிகா பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், கத்துக்குட்டி பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் உடன்பிறப்பே படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில், சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

டிரைலர்
உடன்பிறப்பே திரைப்படம் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலரில், சசிக்குமார் ஊர் விவகாரங்களில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து வருகிறார். இந்த செயல் சமுத்திரக்கனிக்கு பிடிக்காததால் ஜோதிகா மற்றும் சசிகுமார் இடையே பேச்சுவார்த்தை நின்று போகிறது.

5 மில்லியன் பார்வையாளர்கள்
ஒரு பக்கம் அண்ணன் மற்றொரு பக்கம் கணவர் என இரண்டுக்கும் நடுவில் பாசபிணைப்பில் சிக்கி தவிக்கிறார் ஜோதிகா. இதில் சசிக்குமார் ஜோதிகாவின் அண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் திங்கட் கிழமை மாலை வெளியானது. 48 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

நவம்பர் 2ந் தேதி
சூர்யா தயாரித்து ஒரு வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ஜெய்பீம் படம் நவம்பர் 2-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
அதேபோல, ரம்யா பாண்டியன், வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும். கிராமத்து பின்னணி கொண்ட இத்திரைப்படம் அண்மையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது வியந்து பாராட்ட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











