Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வன்முறை எப்போதும் தீர்வை கொடுக்காது… கெத்தா வெளியான உடன்பிறப்பே டிரைலர் !
சென்னை : ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அண்ணன், தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.
45 வருடங்களாக என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி… ரஜினிகாந்த் உருக்கமான ட்விட்டர் பதிவு !
கத்துக்குட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
உடன்பிறப்பே
அந்த வகையில், கத்துக்குட்டி பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் உடன்பிறப்பே படத்தில் தற்போது நடித்துள்ளார். இத்திரைப்படத்தில், சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
டிரைலர்
உடன்பிறப்பே திரைப்படம் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், சசிகுமார் ஜோதிகாவுக்கு அண்ணாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி ஜோதிகாவின் கணவனாக நடித்துள்ளார். கணவனுக்கும் அண்ணானுக்கும் இடையே வரும் பிரச்சினையில் அண்ணா தங்கை உறவு பிரிவது போல டிரைலரில் காட்டப்பட்டுள்ளது.
கவனம் பெற்ற வசனம்
மேலும், சசிக்குமார் அடிதடி என்று வன்முறையை கையில் எடுத்துக்கொள்கிறார். வன்முறை எப்போதும் தீர்வை கொடுக்காது... இன்னொரு வன்முறையைத்தான் கொடுக்கும் என்று சமுத்திரக்கனி பேசும் வசனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரிசையாக 4 படங்கள்
2டி நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்த மாதம் முதல், மாதம் ஒரு படம் என அடுத்த நான்கு மாதங்களுக்கு மொத்தம் 4 படங்கள் வெளியாகவுள்ளன. இதில், உடன்பிறப்பே திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
நவம்பர் 2ந் தேதி
சூர்யா தயாரித்து ஒரு வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ஜெய்பீம் படம் நவம்பர் 2-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார்.
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
அரிசில் மூர்த்தி இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும். கிராமத்து பின்னணி கொண்ட இத்திரைப்படம் அண்மையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து வியந்து பாராட்ட வைத்துள்ளது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!