11ம் தேதி கோப்ரா இசை வெளியீடு.. உதயநிதி வெளியிட்ட வீடியோ.. விக்ரம் கலந்து கொள்வாரா?

சென்னை : நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன்மூலம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே ட்ரீட்தான். சமீபத்தில் ஓடிடியில் வெளியான மகான் படமும் சிறப்பான திரைக்கதையால் ரசிகர்களை மிரட்டியது.

மகான் படம்

மகான் படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் படமாக வெளியான இந்தப் படத்தில் த்ருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரிலீசுக்கு தயாரான கோப்ரா

ரிலீசுக்கு தயாரான கோப்ரா

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசை ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இன்னும் ஒரு மாதத்தில் படம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜூலை 11ல் ஆடியோ வெளியீடு

ஜூலை 11ல் ஆடியோ வெளியீடு

படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வரும் 11ம் தேதி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமான அளவில் வெளியாகவுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

உதயநிதி அறிவிப்பு

இந்தத் தகவலை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. தற்போது நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ள படத்தின் ஹீரோ விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், அவர் பங்கேற்பாரா எனற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

நடிகர் Vikram-க்கு திடீர் உடல்நலக்குறைவு... அதிர்ச்சியில் ரசிகர்கள் *India | Oneindia Tamil
 மிரட்டும் போஸ்டர்கள்

மிரட்டும் போஸ்டர்கள்

மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. படத்தில் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடி சேர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X