உதயநிதியுடன் இணையும் பிரபல இயக்குநர்... இந்த மாதத்தில் சூட்டிங் துவக்கம்?...உண்மையா?

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் கண்ணை நம்பாதே, ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படங்களை அடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் மற்றும் அரசியல்வாதி என இரண்டு தளங்களில் தன்னை பிசியாக ஈடுபடுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்டாலின், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

தமிழில் ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் நடித்த உதயநிதி தொடர்ந்து கதைககு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்து சிறப்பான நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து சிறந்த கதைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது மு மாறனின் கண்ணை நம்பாதே மற்றும் அருண்ராஜா காமராஜின் ஆர்ட்டிகிள் 15 இந்தி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தொகுதி மேம்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

கர்ணன் இயக்குநருடன் உதயநிதி

கர்ணன் இயக்குநருடன் உதயநிதி

மேலும் மகிழ் திருமேனியின் பெயரிடப்படாத படத்திலும் நடித்துவரும் உதயநிதி, அடுத்ததாக தனுஷின் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேற்குறிப்பிட்ட படங்களின் சூட்டிங்கை முடித்துவிட்டு மாரி செல்வராஜுடன இணைகிறார் உதயநிதி.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு ஜோடியாகும் கீர்த்தி

உதயநிதிக்கு ஜோடியாகும் கீர்த்தி

படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசிலும் இணைந்துள்ளனர். தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் உதயநிதி, இந்தப் படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X