நான் ஹாஸ்பிடல் போக நயன்தாராதான் காரணம்: உதயநிதி

By Mayura Akilan

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்" என்று நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் 'நண்பேன்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ராஜேஷின் உதவி இயக்குநர் ஜெகதீஷ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டதாகவும் அதை நயன்தாரா ஏற்க மறுத்துவிட்டதால் உதயநிதி தற்கொலை முயற்சி என செய்திகள் பரவியது. இதற்கு உதயநிதி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதன்முறையாக இச்செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.

ஹாஸ்பிடல் போனேன்

ஹாஸ்பிடல் போனேன்

ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "நான் மருத்துவமனைக்குப் போக நயன்தாராவும் ஒரு விதத்தில் காரணம்தான். ஆனால், அது தற்கொலை முயற்சி இல்லை.

சண்டைக்காட்சியில் அடி

சண்டைக்காட்சியில் அடி

'நண்பேன்டா' படத்தில் ஒரு ஃபைட் சீன். அதில் நயன்தாராவை நான் சுத்திவிட, அவர் வில்லனை அறைந்துவிட்டு திரும்ப வருகிற மாதிரி ஒரு காட்சி. ஆனால், நான் சுத்திவிட்டதும் என்னையே அவர் அடித்துவிட்டார். அவரது நகம் என் இடது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது.

பறந்த கிசுகிசு

பறந்த கிசுகிசு

அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கட்டுப் போட்டு ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு காயம். அதுதான் நயன்தாராவுக்கும் என் மருத்துவமனை விசிட்டுக்குமான தொடர்பு" என்று கூறியுள்ளார் உதயநிதி.

இலவச விளம்பரம்

இலவச விளம்பரம்

கிருத்திகாவும் நயன்தாராவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அதனால இதைப் பத்திலாம் கிருத்திகா கண்டுக்கவே இல்லை. ஆனால் நான்தான் நம்ம படத்துக்கு பைசா செலவில்லாம பப்ளிசிட்டி'னு நயன்தாராவிடம் சொன்னேன்.

அடுத்த படத்திலும் ஜோடி

அடுத்த படத்திலும் ஜோடி

'என்றென்றும் புன்னகை' இயக்குநர் அஹமத் டைரக்ஷன்ல 'இதயம் முரளி'னு ஒரு படம் பண்றேன். 'யார் ஹீரோயின்'னு நயன்தாரா கேட்டாங்க. 'ஆர்வமாக் கேக்கிறீங்களே... நீங்களே பண்றீங்களா?'னு கேட்டேன். ஆனால் அதுக்கு நயன்தாரா நோ சொல்லிட்டாங்க. அந்தப் படத்துல ஹன்சிகா நடிக்கிறாங்க என்று கூறி கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் உதயநிதி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X