மார்ச் மாதத்தில் வெளியாகிறதா உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படம்? விரைவில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படம்

நெஞ்சுக்கு நீதி படம்

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆர்ட்டிகள் 15. இந்தப் படம் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் உதயநிதி லீட் ரோலில் நடிக்க உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் அருண் ராஜா காமராஜ்.

டப்பிங் பணிகள் துவக்கம்

டப்பிங் பணிகள் துவக்கம்

இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன்,சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதி செய்யப்பட்டு தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. நேற்றைய தினம் உதயநிதி டப்பிங் செய்யும் புகைப்படம் வெளியானது.

டீசரை வெளியிட திட்டம்

டீசரை வெளியிட திட்டம்

படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் பணிகள் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே படத்தை வரும் குடியரசு தினத்தையொட்டி ரிலீஸ் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மார்ச் 2022 ரிலீஸ்?

மார்ச் 2022 ரிலீஸ்?

ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் வேலைகள் முடிய தாமதமாகி வருவதால் படத்தை வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தற்போது திட்டமிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியான கனா படம் அவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இதையடுத்து தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற இந்தப் படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

அதே போல உதயநிதி ஸ்டாலின் தற்போது சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில், அவரது நெஞ்சுக்கு நீதி படம் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X