'பில் கேட்ஸ்' போல் சிந்திப்பவர் அண்ணன்.. உதயநிதிக்கும் 'ஜால்ரா' தொடங்கியது!

By Sudha

சேலம்: நம்ம அண்ணன் பில் கேட்ஸ் போல நிறைய சிந்திக்கிறார். தமிழகத்தின் பில் கேட்ஸ் நம்ம அண்ணன்தான். எதிர்காலத்தில் பெரிய உயரத்திற்குப் போவார்... இது மு.க.ஸ்டாலின் மகனாக இருந்து, பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்து, தற்போது நடிகராகவும் மாறியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது ரசிக கண்மணிகள் சூட்டிய புகழாரப் பேச்சு.

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார். பின்னர் தனது தாத்தா முதல்வராக இருந்தபோது, சினிமாவுக்கு தயாரிப்பாளராக காலெடி எடுத்து வைத்தார். பிறகு நடிகராகி விட்டார். ஒரு கல் ஒரு கண்ணாடி அவரை நடிகராக வெளிக்காட்டியது.

ரசிகர் மன்றமும் வந்தாச்சு

ரசிகர் மன்றமும் வந்தாச்சு

இப்போது உதயநிதிக்கு ரசிகர் மன்றத்தையும் தடபுடலாக தொடங்கி விட்டனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தை ஸ்டாலின் ஆதரவு திமுகவினர் தொடங்கி வைத்துள்ளனர்.

தாத்தாவுக்கு தர்மலிங்கம், அப்பாவுக்கு பொய்யாமொழி, மகனுக்கு மகேஷ்

மு.க.ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக விளங்கியவர் மறைந்த அன்பில் பொய்யாமொழி. இவரது தந்தை அன்பில் தர்மலிங்கம், கருணாநிதிக்கு நெருக்கமானவர். இப்போது பொய்யாமொழியின் மகன் மகேஷ், உதயநிதியின் ரசிகர் மன்ற மாநிலத் தலைவராக உருவெடுத்துள்ளார்.

முதல் கூட்டம் சேலத்தில்

முதல் கூட்டம் சேலத்தில்

சேலத்தில் ரசிகர் நற்பணி மன்றத்தின் முதல் கூட்டம் தடபுடலாக நடந்தேறியது. அதில் உதயநிதி கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரிய உயரத்திற்குப் போவாருப்பா அண்ணன்

பெரிய உயரத்திற்குப் போவாருப்பா அண்ணன்

நிகழ்ச்சியில் பேசியவர்கள் உதயநிதியை புகழ்ந்து பேசியதைப் பார்த்தும், கேட்டும், கேட்டவர்களுக்கே புல்லரித்துப் போய் விட்டது. அப்படி இருந்தன அவர்கள் சொல்லிய வார்த்தைகள்...

தமிழகத்தின் 'பில் கேட்ஸ்'

தமிழகத்தின் 'பில் கேட்ஸ்'

பில் கேட்ஸ் போல் நிறைய சிந்திப்பவர் நம்ம அண்ணன். தமிழகத்தின் பில் கேட்ஸ் உதயநிதி ஸ்டாலின். மாடர்ன் தியேட்டர்ஸ் இங்கு தான் இருந்தது. நமது டாக்டர் கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர், அவர்களின் அரசியல் பிரவேசம் எல்லாம் இங்கு சேலத்தில் இருந்துதான் தொடங்கியது இங்கே முதல் கூட்டத்தை தொடங்கிய நமது அண்ணன் உதயநிதி ஸ்டாலினும் எதிர்காலத்தில் மிக பெரிய உயரத்திற்கு செல்வார்.. இது பேசியவர்களின் பேச்சிலிருந்து சில துளிகள்..

'பில் கேட்ஸுக்கு' 'பிளாக் கேட்ஸ்' பாதுகாப்பு!

'பில் கேட்ஸுக்கு' 'பிளாக் கேட்ஸ்' பாதுகாப்பு!

உதயநிதிக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பணியையும் ரசிகர்களே ஏற்றுக் கொண்டனர். அதாவது நற்பணி மன்றத்திலிருந்து சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பிளாக் கேட்ஸ் என்று பெயரிட்டு சூப்பராக பாதுகாப்பு கொடுத்து அசத்தினர்.

அடுத்து அரசியலா உதயா?

அடுத்து அரசியலா உதயா?

உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பும், மன்ற நிர்வாகிகள் பேசிய பேச்சையும் கேட்டபோது, ஸ்டாலினின் அரசியல் வாரிசாக உதயநிதியை உருவாக்கும் முயற்சிகளோ இவை என்றுதான் எண்ணத் தோன்றியது...

மெட்ராஸ்காரவுக 'ஆரம்பிச்சுட்டாக', மதுரைக்காரவுக என்னப்பா பண்றாக...?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X