லண்டனில் நயன்தாராவுடன் 'நண்பேன்டா' உதயநிதி ஸ்டாலின்
சென்னை: நண்பேன்டா படத்தின் பாடல் காட்சியை படமாக்க உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா லண்டன் சென்றுள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதே டிசம்பரில் தனுஷின் அனேகன் படம் ரிலீஸாக உள்ளது. ரஜினியின் லிங்காவும் டிசம்பரில் தான் ரிலீஸ்.
இந்த டிசம்பர் ரேஸில் உதயநிதி ஸ்டாலின் நண்பேன்டா படமும் உள்ளது.

உதயநிதி
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்கையில் ஏற்பட்ட நட்பால் தான் உதயநிதி நயன்தாராவை நண்பேன்டா படத்தில் நாயகியாக்கினார்.

தற்கொலை
நண்பேன்டா படத்தில் நடிக்கையில் நயன்தாரா மீது காதல் கொண்டு அதை அவர் ஏற்காததால் உதயநிதி ஸ்டாலின் தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நயன்தாரா
நயன்தாராவின் கை நகம் கண்ணில் பட்டு ரத்தம் வந்ததால் மருத்துவமனைக்கு சென்றதாக உதயநிதி தெரிவித்தார் பரபரப்பை அடக்கினார்.
லண்டன்
நண்பேன்டா குழு பாடல் ஒன்றை படமாக்க லண்டனில் முகாமிட்டுள்ளது என்று உதயநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











