கர்ணன் பட இயக்குநரோட ஜாய்ன் ஆகும் உதயநிதி... படத்தோட டைட்டிலே அமர்க்களமா இருக்கே!

சென்னை: நடிகர் உதயநிதி ஆரம்பத்தில் காமெடி களங்களில் நடித்தாலும் தற்போது சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Recommended Video

MK Stalin-ன் Ungalil Oruvan ஒரு கண்ணோட்டம்! Stalin's Autobiography | OneIndia Tamil

அரசியலில் ஒருபக்கம் சிறப்பான செயல்பாட்டை காட்டிவரும் இவர், அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட அழுத்தமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது இணைந்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஒருபக்கம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது நெஞ்சுக்கு நீதி, கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இதில் நெஞ்சுக்கு நீதி படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

ராஜேஷ் படத்தில் அறிமுகம்

ராஜேஷ் படத்தில் அறிமுகம்

முன்னதாக ரெட் ஜெயண்ட் மூவிசின் சார்பில் தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர், கடந்த 2012ல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார். டைரக்டர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. வெற்றிப் படமாகவும் அமைந்தது.

புதிய படத்தின் அறிவிப்பு

புதிய படத்தின் அறிவிப்பு

இதையடுத்து கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சைக்கோ என சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கம்

மாரி செல்வராஜ் இயக்கம்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படத்தில் உதயநிதிக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாகியுள்ளார். மேலும் வில்லனாக பகத் பாசிலும் காமெடி களத்தில் வடிவேலுவும் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. படம் பிரம்மாண்டமான அளவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேரில் வாழ்த்து

நேரில் வாழ்த்து

இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னையில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ற உதயநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் தற்போது இவர்கள் இணையும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X