Maamannan: ஓடிடிக்கு தயாராகும் மாமன்னன் படம்.. எப்ப வெளியாகுது தெரியுமா?

சென்னை: நடிகர்கள் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

உதயநிதியின் கடைசி படமாக வெளியான இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். பல சர்ச்சைகளுக்கிடையில் படம் வெளியானது.

இந்தப் படத்தில் வடிவேலுவின் நடிப்பு மிகுந்த பாராட்டிற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது படம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Udayanidhis Maamannan movie streaming in Netflix on 27th of July

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் மாமன்னன் படம்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. உதயநிதியின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் வெளியான இந்தப் படத்திற்கு முன்னதாக அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் எப்படி நடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது. சில கலவையான விமர்சனங்களை படம் பெற்றிருந்த போதிலும் படம் ஒட்டுமொத்தமாக சிறப்பான விமர்சனங்களையே பெற்றது. படத்தில் வடிவேலு மாஸ் காட்டியிருந்தார். இதுவரை காமெடி ட்ராக்கில் பயணம் செய்துவந்த வடிவேலு, இந்தப் படத்தில், அதற்கான சாயல் சிறிதுமின்றி கேரக்டர் ரோலில் பயணம் செய்திருந்தார்.

இந்தக் கேரக்டர் படத்திற்கு அதிகமான பலத்தை கொடுத்தது. மேலும் இடைவேளை காட்சிகள், திரைக்கதை அமைப்பு பேன்றவையும் படத்திற்கான பலங்களாக அமைந்தன. கடந்த மாதம் 29ம் தே திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படம் தற்போதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

Udayanidhis Maamannan movie streaming in Netflix on 27th of July

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனிடையே 9 நாட்களில் படம் 52 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படத்தின் நாயகன் உதயநிதி அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 27ம் தேதி முதல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தான் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று உதயநிதி தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியே நடித்தாலும் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த அளவிற்கு அவருக்கு மாரி செல்வராஜின் இயக்கம் பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது படம் பிரபல ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்க முடியாதவர்கள் இந்த தளத்தில் சென்று பார்த்துக் கொள்ள முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X