உதயநிதியுடன் இணைந்து நடிக்க போகும் லட்சுமி மேனன்
சென்னை: தொடர்ந்து விஷாலுடன் ஜோடி போட்ட லட்சுமி மேனன், அடுத்து உதயநிதியின் கையைப் பிடிக்கப் போகிறார்,
"இது கதிர்வேலன் காதல்" படத்துக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படத்தில்,. அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்தான்.
இந்தப் படத்துக்காகவே, இப்போது நடித்து வரும் "நண்பேன்டா" படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியிருக்கிறார் உதயநிதி.

இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை, இது கதிர்வேலன் காதல் என்ற சுமார் படம் தந்த எஸ்.ஆர்.பிரபாகரனுக்கே கொடுத்திருப்பதுதான் ஸ்பெஷல்.
இந்த முறை பிரபாகரன், உதயநிதிக்காக பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் ஒன்றை பிடித்து அதற்கான டிஸ்கஷனில் தீவிரமாக இருக்கிறார்.
இதில் உதயநிதியின் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இது வில்லேஜ் படம் என்பதால் சந்தானத்துக்கு பதில் சூரி நடிப்பார் என்கிறார்கள். ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை.
கிராமத்து படம் என்றாலே பொள்ளாச்சி, தேனி, திருநெல்வேலி, மதுரை ஏரியா என்பதை மாற்றி திருவாரூர், நாகப்பட்டினம் ஏரியாவில் கதை பிடிக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.


Click it and Unblock the Notifications











