வெற்றி மாறனின் விடுதலை.. தமிழக ரைட்சை கைப்பற்றிய உதயநிதி.. சூப்பர்ல!
சென்னை : வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துவரும் விடுதலை படம் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.
காமெடி கிங்காக இருந்துவரும் சூரி, இந்தப் படத்தின்மூலம் நாயகனாக மாறியுள்ளார். சென்டிமெண்ட் கேரக்டரிலும் கலக்கிவரும் சூரியின் கேரக்டர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டிப் போட்டுவரும் சூழலில் அந்த சான்ஸ் தற்போது விடுதலை படத்தின்மூலம் சூரிக்கு கிடைத்துள்ளது.

நடிகர் சூரி
நடிகர் சூரி தன்னுடைய காமெடியால் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருபவர். இவருக்கு சிறப்பான அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது வெண்ணிலா கபடிக் குழுதான். இந்தப் படத்தில் பரோட்டா காமெடியில் பின்னி பெடலெடுத்திருப்பார் சூரி. இந்தப் படத்திலிருந்து அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரே நிலைத்து விட்டது.

சிறப்பான படங்கள்
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவிற்கு சப்போர்ட் செய்யும் கேரக்டர்களில், காமெடியில் சிறப்பாக நடித்து வருகிறார் சூரி. இவரது டைமிங் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் சமீபத்தில் வெளியான அண்ணாத்த, வரையில் இவர் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகனாக களமிறங்கிய சூரி
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியானது விருமன். இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அதீதியுடன் இணைந்து இவர் செய்யும் அலப்பறைகள் ரசிகர்களை வேற லெவலில் கவர்ந்தது. அடுத்தடுத்த சிறப்பான காமெடிக் கதைக்களங்களில் நடித்துவரும் சூரி, வெற்றி மாறன் இயக்கத்தில் நாயகனாக விடுதலை படத்தில் நடித்து வருகிறார்.

சிறப்பான ஸ்டில்ஸ்
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ள நிலையில், படத்தின் ஸ்டில்ஸ் அவ்வப்போது வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகிவரும் விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தமிழக உரிமையை கைப்பற்றிய உதயநிதி
இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே ஆர்எஸ் இன்போமெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, கோ படங்கள் மூலம் இணைந்த இந்தக் கூட்டணி தற்போது விடுதலை படத்திலும் இணைந்துள்ளது.

விரைவில் ரிலீஸ் தேதி
ஏற்கனவே பிரம்மாண்டமாக உருவாகிவரும் விடுதலை படத்துடன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்துள்ளது மிகுந்த சிறப்பாக பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வரும் இந்தப் படம் விரைவில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் நம்பிக்கை
பல படங்களின் வெற்றிக்கு முகவரியாக காணப்படுகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இந்நிலையில் விடுதலை படத்தின் வெளியீட்டு உரிமையை இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளதால், இந்தப் படமும் சிறப்பான வெற்றியை பெறும் என்று தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications