அரசியல் களத்தில் பிஸியாக உதயநிதி.. படப்பிடிப்பு பணிகளில் இணைவது எப்போது!?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் படங்களை தயாரிக்க தொடங்கி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அடுத்ததாக வெளிவரவுள்ள உதயநிதி ஸ்டாலினின் புதுப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெட் ஜெயன்ட் மூவிஸ்
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்பிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ்-ஐ தொடங்கி படங்களை தயாரித்து வந்தார். சில வருடங்களாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை.

மீண்டும் தொடக்கம்
உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ஹிந்தி படமான Article - 15 படத்தின் தமிழ் ரீமேக்கிலும், இயக்குனர் பாலா இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுமட்டுமின்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் மீண்டும் தொடங்கி படங்களை தயாரிக்க உள்ளார்.

படப்பிடிப்பு தளம்
அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் படங்களில் நடிக்க நேரத்தை ஒதுக்கவுள்ளார். முதலில் Article - 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கான வேலைகளை முடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆகஸ்ட் இறுதியில்
கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். தற்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் வேலைகள் ஓய்வின்றி நடந்து வருகிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











