Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயனதாரா 'மிஸ்' ஆனால் என்ன, உதயதாரா 'மிஸஸ்' ஆகப் போகிறார்!
தீ நகர், கண்ணுக்குள்ளே, மலையன், பயம் அறியான், கண்ணும் கண்ணும், விலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் உதயதாரா. வழக்கம் போல இவரும் கேரளாவைச் சேர்ந்த நாயகிதான்.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு, சரியாக பிரேக் பிடிக்காமல் போனவர் இவர். இருந்தாலும் தற்போதும் இவர் கையில் வேட்டையாடு, பிரம்மபுத்ரா என இரண்டு படங்கள் இருக்கிறதாம்.
தமிழ் தவிர மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சியமாகியுள்ளது. அவர் துபாயைச் சேர்ந்த பைலட் ஜுபின் ஜோசப் என்பவரை மணக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்தம் வரும் மார்ச் மாதம் உதயதாராவின் சொந்த ஊரான கோட்டயத்தில் நடக்கிறது. நிச்சயம் முடிந்த அடுத்த மாதமே அதாவது ஏப்ரல் மாதம் கேரளாவில் திருமணம் நடக்கவிருக்கிறது.
அனன்யாவுக்கு சமீபத்தில்தான் தாம்பூலம் மாற்றினார்கள். சினேகாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது. இந்த வரிசையில் உதயாதாரவும் சேருகிறார்.
நயனதாராதான் இதில் மிஸ்ஸாகி விட்டார்...!