twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சுக்கு நீதி படத்தின் உண்மையான ஹீரோயின் இவர் தான்...உதயநிதி சொன்ன செம தகவல்

    |

    சென்னை : நெஞ்சுக்கு நீதி படத்தின் உண்மையான ஹீரோயின் யார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை அந்த படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினே கலகலப்பாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

    Recommended Video

    இந்த படம் ரொம்ப Danger-ங்கனு எல்லாம் பயந்துட்டாங்க | Udhayanidhi Stalin | Nenjukkuu Needhi

    டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்த போனி கபூர் தயாரித்துள்ளார். 2019 ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக் பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி.

    சன்னி லியோனுக்கு என்னம்மா மசாஜ் பண்ணி விடுறாரு.. சூட்டிங் ஸ்பாட்டில் இந்த கொடுமை வேற நடக்குதா?சன்னி லியோனுக்கு என்னம்மா மசாஜ் பண்ணி விடுறாரு.. சூட்டிங் ஸ்பாட்டில் இந்த கொடுமை வேற நடக்குதா?

    டிரைலர் வெளியீடு

    டிரைலர் வெளியீடு

    ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 20 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

    போலீஸ் ரோலில் உதயநிதி

    போலீஸ் ரோலில் உதயநிதி

    நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட 20 மணி நேரத்தில் 1.9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக உதயநிதி, போலீஸ் ரோலில் நடித்துள்ளார். டிரைலரில் உதயநிதியின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தில் உதயநிதியின் மனைவியாக ஷிவானி நடித்துள்ளார்.

    இவர் தான் உண்மையான ஹீரோயினா

    இவர் தான் உண்மையான ஹீரோயினா

    இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அன்புச்செழியன், போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த படத்தில் எனது மனைவியாக ஷிவானி நடித்துள்ளார். ஆனால் உண்மையான ஹீரோயின் யார் என்று கேட்டால் சுரேஷ் சக்கரவர்த்தி தான்.

    உதயநிதி சொன்ன தகவல்

    உதயநிதி சொன்ன தகவல்

    சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி இருவரும் தான் என்னுடன் படம் முழுவதும் வருவார்கள். மயில்சாமி கூட என்னிடம் விளையாட்டாக கேட்டார், ஏன் தம்பி, ஒரு ஹீரோயின் கூட இல்லாம தினமும் எங்க முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கீங்களே. உங்களுக்கு போர் அடிக்காதா என்று. நாங்கள் மூன்று பேரும் படத்தில் ஒன்று ஜீப்பில் செல்வோம், இல்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் இருப்போம். அதுவும் இல்லை என்றால் காட்டில் எதையாவது தேடிக் கொண்டிருப்போம் என்றார்.

    அனைவரையும் கவர்ந்த பேச்சு

    அனைவரையும் கவர்ந்த பேச்சு

    ஹீரோயின் அவ்வப் போது தான் வருவார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் மயில்சாமி தான் படம் முழுக்க வருவார் என்பதை உதயநிதியே சொல்லி விட்டார். அவரின் இந்த பேச்சு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

    English summary
    During Nenjuku Needhi audio and trailer launch, Udhayanidhi Stalin told that Suresh Chakravarthy was the real heroine in this movie. Because he and Myilsamy were travel with me still the end of the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X