Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'!
Recommended Video
கொச்சின்: அடுத்தடுத்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தி ரீமேக்கான 'மனிதன்' படத்தை தொடர்ந்து தற்போது மலையாள படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' ரீமேக்காக 'நிமிர்' என்கிற படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்துள்ளார் உதயநிதி.
வரும் ஜனவரி 26-ம் தேதி 'நிமிர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தின் ரீமேக்கிலும் உதயநிதி நடிக்க இருக்கிறார்.
'ஹேப்பி வெட்டிங்' படத்தை இயக்கிய ஓமர் லுலுவே தமிழிலும் அதை இயக்கவுள்ளாராம். சமீபத்தில் தானும் உதயநிதியும் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஓமர் லுலு.
கடந்த 2016-ம் ஆண்டு மலையாள சினிமாவின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்தது. சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து, அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார் இயக்குனர் ஓமர் லுலு.
இப்படத்தின் ரீமேக்கில் தான் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. 'நிமிர்' படத்தில் உதயநிதி சிறப்பாக நடித்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டி வரும் நிலையில், ரீமேக் படங்களைக் குறி வைத்து வருகிறார் உதயநிதி. இப்படத்தின் மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!