»   »  கொச்சியில் டூயட் பாடும் உதயநிதி – எமி ஜாக்சன்

கொச்சியில் டூயட் பாடும் உதயநிதி – எமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதயநிதி ஸ்டாலினும், கவர்ச்சிப் புயல் எமி ஜாக்சனும் கொச்சியில் பிஸியாக டூயட் பாடி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் நண்பேன்டா படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். மேலும் உதயநிதியின் மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் 20 நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கிறது.

ஜில் ஜில் நாயகிகள்

ஜில் ஜில் நாயகிகள்

தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பிரபலமான கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் உதயநிதி.

ஹன்சிகா - நயன்தாரா

ஹன்சிகா - நயன்தாரா

அந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டாவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.

எமி ஜாக்சனுடன்

எமி ஜாக்சனுடன்

உதயநிதி தற்போது நடிக்கும் புதிய படத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

கெத்து மாறுமா?

கெத்து மாறுமா?

திருக்குமரன் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் கெத்து என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு மாற்றப்பட இருப்பதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் நண்பேண்டா

ஏப்ரலில் நண்பேண்டா

மேலும், நண்பேன்டா படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகயிருக்கும் நிலையில், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தற்போது தொடங்கி விட்டார் உதயநிதி.

கேரளாவில் முகாம்

கேரளாவில் முகாம்

முதல்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம் கொச்சியில் இன்று முதல் தொடங்குகிறது. சில நாட்களுக்கு முன்பே யூனிட் அங்கு சென்று முகாமிட்டிருக்கும் நிலையில், நேற்று உதயநிதி, எமிஜாக்சன் உள்பட படத்தில் நடிப்பவர்கள் கேரளா சென்றுள்ளனர்.

பாவாடை தாவணியில் எமி

பாவாடை தாவணியில் எமி

மேலும், ஐ படத்தில் டூ-பீஸ் கெட்டப்பில் நடித்து இளவட்ட ரசிகர்களை நடுநடுங்க வைத்த எமிஜாக்சனுக்கு இந்த படத்தில் பாவாடை தாவணி காஸ்டியூம்தான்அதிகமாக கொடுக்கிறார்களாம்.

கவர்ச்சியும் இருக்கு

கவர்ச்சியும் இருக்கு

அதற்காக ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் படம் முழுக்க குடும்ப குத்துவிளக்காக எமி வந்தாலும் பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம்.

English summary
"Shooting of my film with dir Thirukumaran starts frm Feb 22nd! Jharrisjayaraj sir is the music director! Lookin frwd! iamAmyJackson plays the female lead role! Sathyaraj sir doing a v important role (sic)," Udhay posted on his Twitter page

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil