ரூ 40 லட்சத்தை மோசடி செய்துவிட்டார்- காஜல் அகர்வால் மீது உதயநிதி புகார்
நான் கொடுத்த அட்வான்ஸ் தொகை ரூ 40 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டார் நடிகை காஜல் அகர்வால் என தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களில் புகார் கூறியுள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.
பாரதிராஜாவால் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல் அகர்வால். அதைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானார்.

முதல் காஜல்தான்
உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேன்டா' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்தனர்.

ரூ 40 லட்சம் அட்வான்ஸ்
இதற்காக காஜல் அகர்வாலுக்கு 40 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் காஜல் அகர்வால் நடித்த படங்கள் பெரிதாகப் போகாததால், அவருக்கு பதில் நயன்தாராவை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

திருப்பிக் கொடு
நண்பேன்டா படத்தில் காஜல் அகர்வால் நடிக்காததால் அட்வான்ஸாக கொடுத்த ரூ.40 லட்சத்தை உதயநிதி திருப்பி கேட்டார். ஆனால் அதை கொடுக்க காஜல் அகர்வால் மறுத்து விட்டார்.

அடுத்த படத்துல பாத்துக்கலாம்
உங்களுடன் அடுத்த படத்தில் நடிக்கும் போது அட்வான்ஸ் தொகையை கழித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம். ஆனால் இனி காஜலுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகளுக்கு வழியில்லாததால், அதை அப்புறம் பாத்துக்கலாம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுங்க என உதயநிதி சொல்லிவிட்டாராம்.

மறுப்பு - புகார்
பல தடவை இதுகுறித்துக் கேட்டும் பணத்தை காஜல் அகர்வால் கொடுக்கிற வழியைக் காணோம் என்பதால், தயாரிப்பாளர் சங்கத்தில் காஜல் அகர்வால் மீது உதயநிதி புகார் அளித்துள்ளார். அட்வான்ஸ் தொகை ரூ.40 லட்சத்தை வாங்கி தரும்படி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கம் விரைவில் இது குறித்து விசாரணை நடத்த உள்ளது. நடிகர் சங்கத்திலும் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











