வாரிசு, துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்... அதனால நமக்கு என்ன லாபம்..? உதயநிதியின் அல்டிமேட் பதில்

சென்னை: 2023 பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு திரைப்படங்கள் வெளியாகின.

ஜனவரி 11ம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

அதேபோல், வாரிசு, துணிவு படங்கள் தலா 300 கோடி கலெக்‌ஷன் செய்ததாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து உதயநிதி ஓபனாக பேசியுள்ளார்.

வாரிசு - துணிவு

வாரிசு - துணிவு

2023ம் ஆண்டின் தொடக்கமே கோலிவுட் பாக்ஸ் ஆபிஸுக்கு சிறப்பாக அமைந்தது. விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் ஒரேநாளில் ரிலீஸாகி மாஸ் காட்டின. பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு, துணிவு இரண்டுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றன. அதேநேரம் வசூலிலும் சக்கைப் போடு போட்டன. பல வருடங்களுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வாரிசு, துணிவு இரண்டு படங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. அதனால், வாரிசு, துணிவு இரண்டுக்குமே முதல் வாரத்தில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது, அதனால் பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான சம்பவங்கள் செய்தன. வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை கடந்ததாக அறிவித்தார். அதேபோல், போனி கபூரும் துணிவு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவித்தார்.

உதயநிதி ஓபன் டாக்

உதயநிதி ஓபன் டாக்

அஜித்தின் துணிவு படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூலம் வெளியிட்டார். அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் 4 ஏரியாக்களின் ரைட்ஸையும் உதயநிதியே கைப்பற்றினார். இதனால், இந்த இரண்டு படங்களின் உண்மையான வசூல் நிலவரம் தெரிந்திருக்கும். அதனடிப்படையில் வாரிசு, துணிவு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து கேட்கப்பட்டது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, இதுகுறித்து ஓபனாக பேசியது வைரலாகி வருகிறது.

நமக்கு என்ன பலன்?

நமக்கு என்ன பலன்?

அதாவது, "துணிவு, வாரிசு தயாரிப்பாளர்களும், படம் பார்த்த ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அப்படி இருக்க நாம் ஏன் வாரிசு, துணிவு படங்களின் வசூல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அதில் ஏதாவது பணம் போட்டிருக்கோமா.? இல்லையென்றால் நமக்கு ஏதாவது பணம் வரப்போகிறதா.? எதுவுமே இல்லாமல் எதற்காக வாரிசு, துணிவு பாக்ஸ் ஆபிஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்" என ஓபனாக பேசியுள்ளார். உதயநிதியின் இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து லியோ - ஏகே 62 ரேஸ்?

அடுத்து லியோ - ஏகே 62 ரேஸ்?

வாரிசு - துணிவு பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்து இன்னும் முடியாத நிலையில், அடுத்து லியோ, ஏகே 62 இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் நடந்து வரும் இதில், விஜய் உட்பட மற்ற நடிகர்களும் கலந்துகொண்டனர். ஆனால், அஜித்தின் ஏகே 62 அப்டேட் கூட இன்னும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு?

ரசிகர்கள் எதிர்பார்ப்பு?

ரசிகர்களும் விஜய் - அஜித் இருவரும் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் மோத வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகிறது. ஆனால், அதற்குள்ளாக ஏகே 62 படத்தின் அப்டேட்டாவது வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X