உதயநிதி படத்தோட ஸ்பெஷல் அப்டேட் இன்று அறிவிப்பு... ரிலீஸ் அப்டேட்டா இருக்குமோ?
சென்னை : நடிகர் உதயநிதி அடுத்ததாக அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ஆர்ட்டிக்கிள் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் குறித்து இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் உதயநிதி
நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் காமெடி, காதல் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தேர்ந்தெடுத்த இயக்குநர்களின் படைப்பிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வருகிறார்.

நெஞ்சுக்கு நீதி படம்
இந்தப் படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. போனிகபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் மேலும் ஆரி, தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மோஷன் போஸ்டர் வெளியீடு
இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படம் மார்ச் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அருண்ராஜா காமராஜ் இயக்கம்
கனா படம் மூலம் கோலிவுட்டில் சிறப்பான கவனம் ஈர்த்த அருண் ராஜா காமராஜ், தற்போது பாலிவுட் படத்தின் ரீமேக்கை உருவாக்கி வருகிறார். பாலிவுட்டில் கடந்த 2019ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படம் பாராட்டுக்களையும் வசூலையும் குவித்தது.

திபு நினன் தாமஸ் இசை
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலத்தை இந்தப் படம் பேசியது. இந்நிலையில் தற்போது அந்தப் படம் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் திபு நினன் தாமஸ். தமிழரசன் பிச்சமுத்து படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார்.

சிறப்பு அறிவிப்பு
இந்தப் படத்தின் சூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் உள்ளிட்டவை நிறைவடைந்துள்ள நிலையில் படம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு சார்பில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
கொரோனா, தேர்தல் உள்ளிட்டவற்றால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போன நிலையில், தற்போது படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படம் குறித்த எந்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











