வெளியானது உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நெஞ்சுக்கு நீதி படம் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படம்
இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த ஆர்டிகிள் 15 திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ளது நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றி தயாரித்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் போனி கபூர். படத்தில் உதயநிதியும் அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜ் இயக்கம்
படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவரது கனா படம் சிறப்பான வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரின் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த முறை இவர் சீரியசான கதைக்களத்தை கையிலெடுத்துள்ளார். டீசர் உள்ளிட்டவை வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளன.

இடைவெளிக்கு பின்பு சூட்டிங்
படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டு செயல்பட்டுவரும் உதயநிதி தேர்தல் காரணமாக சிறிய இடைவெளி விட்டுவிட்டு பின்பு நெஞ்சுக்கு நீதி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றார்.

மே 20ல் ரிலீஸ்
இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது மே மாதம் 20 தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

போனி கபூர் தயாரிப்பு
கண்ணை நம்பாதே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் உதயநிதி. இந்நிலையில் தற்போது அவரது நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார்.

வலிமையான தலைப்பு
இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் உதயநிதி முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு நெஞ்சுக்கு நிதி என்ற வலுவான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் சுயசரிதை நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில்தான் வெளியானது. அந்த வலிமையான டைட்டிலில் தற்போது இந்தப்படம் வெளியாகவுள்ளது


Click it and Unblock the Notifications











