சீனு ராமசாமியோடு இணையும் உதயநிதி ஸ்டாலின்... அடுத்த பட அறிவிப்பு!

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின், தான் அடுத்து நடிக்கப் போகும் படம் பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் உதயநிதி.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூலம் தமிழ்த் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் வெற்றியடைந்தாலும், சமீப காலமாக அவர் நடித்துவரும் படங்கள் எதுவும் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.

Udhayanidhi's next movie with Seenu ramasamy

இந்நிலையில், இவர் தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் அடுத்து நடிக்க உள்ள படம் குறித்த தகவலை தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியை வைத்து, 'தென்மேற்கு பருவக் காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றி படங்களைக் கொடுத்து விருதுகளைப் பெற்ற சீனு ராமசாமியுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X