உதயநிதி - சீனு ராமசாமி இணையும் பட டைட்டில்... ஹீரோயின் இவரா?

By Vignesh Selvaraj

Recommended Video

கமல் பட பாடலை தலைப்பாக்கிய உதயநிதி மற்றும் சீனு ராமசாமி !!- வீடியோ

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின், சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'கண்ணே கலைமானே' என வைக்கப்பட்டுள்ளது.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூலம் தமிழ்த் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சீனு ராமசாமி இயக்கிய 'நீர்ப்பறவை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

'கண்ணே கலைமானே' படத்தில் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் உதயநிதி

நடிகர் உதயநிதி

உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் வெற்றியடைந்தாலும், சமீப காலமாக அவர் நடித்துவரும் படங்கள் எதுவும் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.

நிமிர் படம்

இந்நிலையில், இவர் தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடலை இன்று ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட இருக்கிறார்.

கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே

விஜய் சேதுபதியை வைத்து, 'தென்மேற்கு பருவக் காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றி படங்களைக் கொடுத்து விருதுகளைப் பெற்ற சீனு ராமசாமியுடன் இணைந்து 'கண்ணே கலைமானே' படத்தில் நடிக்கிறார் உதயநிதி.

பாடல் வரியில் டைட்டில்

பாடல் வரியில் டைட்டில்

மூன்றாம் பிறை படத்தில் ஜேசுதாஸ் பாடிய 'கண்ணே கலைமானே... கன்னி மயிலென கண்டேன் உனை நானே' எனும் பாடலின் முதல் வரியான 'கண்ணே கலைமானே' உதயநிதி பட டைட்டில் ஆகியிருக்கிறது. இது கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா

தமன்னா

இப்படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. 'தர்மதுரை' படத்தில் நடித்ததன் அடிப்படையில் தமன்னாவிடம் சீனு ராமசாமி பேசி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

சூரி

சூரி

இவர்கள் தவிர, சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் சென்டிமென்ட், ஆக்‌ஷன், காமெடி கலந்து கதை.

சீனு ராமசாமி

சீனு ராமசாமி

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X