சைக்கோ இன்னும் சாகலை.. ஸோ.. கட்டாயம் 2ம் பாகம் வரும்.. உதயநிதி கலகல பேச்சு!

Recommended Video

PSYCHO MOVIE SUCCESS MEET | FILMIBEAT TAMIL

சென்னை : சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி, சைக்கோ படத்தின் இரண்டாம் பாகத்தை கட்டாயம் எடுப்போம் என கூறினார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கும் படம் தான் சைக்கோ. இந்த படம் கடந்த ஜனவரி 24 வெளியாகி மக்களின் பாராட்டை பெற்றது. இதனையடுத்து படத்தின் வெற்றி விழா நேற்று நடைப்பெற்றது இதில் படக்குழுவினர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து இந்த வெற்றியை பரிசளித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர் .

 Udhayanidhi said Psycho 2 will definitely released

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் உதயநிதி படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். இந்த படத்தில் உடல் ரீதியாக தன்னைவிட சைக்கோவாக நடித்த ராஜ்குமார் தான் அதிக உழைப்பை கொடுத்திருக்கிறார் அதற்கு நன்றி என கூறினார் .

 Udhayanidhi said Psycho 2 will definitely released

நடிகர் உதயநிதி படங்கள் வரிசையில் கடைசியாக வெற்றி விழா கொண்டாடிய படம் சரவணன் இருக்க பயமேன் படம் தான். அதற்கு பிறகு உதயநிதி நடித்த இப்படை வெல்லும், பொதுவாக என் மனசு தங்கம், நிமிர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை மூன்று வருடங்களுக்கு பிறகு உதயநிதிக்கு கிடைக்கும் வெற்றி படம் சைக்கோவாகும் இதற்காக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார் உதயநிதி.

 Udhayanidhi said Psycho 2 will definitely released

மேலும் இவரின் கண்ணே கலைமானே படத்தின் வெளியீட்டுக்கு பின் விநியோகஸ்தர் ஒருவர் என் நண்பர் மூர்த்தியை தொடர்பு கொண்டு கண்ணே கலைமானே படத்தில் அவ்வளவு கவர்ச்சி நிறைந்த நாயகியான தமன்னாவை கண்தெரியாத பெண்ணாக நடிக்க வைத்து விட்டீர்கள் அதனால் தான் படம் தோல்வி அடைந்து விட்டது அடுத்த படத்தில் உதயநிதியை கண் தெரியாதவராக நடிக்க வையுங்கள் என்று அந்த வினியோகிஸ்தர் உதயநிதியை திட்டியுள்ளார், இதனை நகைச்சுவையாக உதயநிதி வெற்றி விழாவின் போது பகிர்ந்து கொண்டார் .

 Udhayanidhi said Psycho 2 will definitely released

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கட்டாயம் எடுப்போம் என உறுதி அளித்த உதயநிதி சட்டென்று யோசித்து ஆமாம் சிங்கம்புலி சார் படத்துல செத்துட்டாரே இதற்கு மேல எதுக்கு இரண்டாம் பாகம் என கூறினார். இதற்கு படக்குழுவினர் சட்டென்று விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினர் .

மேலும் பேசிய உதயநிதி, ராஜ் செத்ததை போல காமிக்கவில்லை விழுவதை போல தான் மிஸ்கின் படமாக்கினார். அதனால் ராஜ் தண்ணீரில் விழுந்து உயிரோடு இருக்கிறான் என இரண்டாம் பாகம் எடுக்கலாம் ஆனால் மிஸ்கின் படங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என நகைச்சுவையாக கூறினார். இறுதியில் கமலாதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உயிரோடு இருக்கிறார்கள் அவர்களுக்காக கட்டாயம் சைக்கோ 2 எடுப்பேன் என்று கூறி விடைப்பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X