twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி

    நல்ல படங்களை விமரசகர்கள் பாராட்ட வேண்டும் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: தவறான படங்கள் எடுக்கும்போது அவற்றை கடுமையாக விமர்சிக்கும் மக்கள், நல்ல படங்கள் எடுக்கும்போது அதனைப் பாராட்ட வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்து நல்ல படங்கள் எடுக்கத் தோன்றும் என நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    பிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அஸ்லாம் தயாரித்துள்ள படம் 'ஒரு குப்பைக் கதை'. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் இந்த படத்தின் மூலம் காளி ரங்கசாமி இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல நடன இயக்குனர் தினேஷ் இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திக்கேயன், ஆர்யா, உதயநிதி, இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நல்ல சினிமா:

    நல்ல சினிமா:

    விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, " ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிறது. மைனா உள்பட இதுவரை பல தரமான படங்களை தந்துள்ளோம். மைனாவை போலத்தான் ஒரு குப்பைக் கதை படமும். நிச்சயம் நல்ல சினிமாவாக இது இருக்கும்.

    கோபம் வருகிறது:

    கோபம் வருகிறது:

    தவறான படங்கள் எடுக்கும் போது எங்களை கழுவி ஊத்தும் நீங்கள், நல்ல படங்களை எடுக்கும் போது பாராட்ட வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்து நல்ல படங்கள் எடுக்க தோன்றும். இல்லை என்றால் ஏன் நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்ற கோபம் தான் வரும்.

    மாறிய எண்ணம்:

    மாறிய எண்ணம்:

    என் படங்களில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தேதிக்காகத் தான் நான் முதலில் காத்திருப்பேன். அவர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் நன்றாகத் தானே போய்கிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இவருக்கு இந்த ஆசை என நினைத்தேன். படத்தை பார்த்ததும் அந்த எண்ணம் எனக்கு மாறிவிட்டது.

    கிண்டல்:

    கிண்டல்:

    தினேஷூக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வரும் அழகே அழகே பாடலுக்கு நன்றாக ரிகர்சல் செய்து ஆடினேன். பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது என்னை போன்றே அவர் டான்ஸ் ஆடி கிண்டல் செய்வது போல் இருந்தது. நான் உடனே தினேஷ் மாஸ்டரிடம் இந்த விஷயத்தை கூறினேன். அந்த பாடலுக்கும் நான் தான் நடனம் அமைத்தேன் என்று சிரித்தார்.

    25ம் தேதி ரிலீஸ்:

    25ம் தேதி ரிலீஸ்:

    இந்த படம் இம்மாதம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்" என இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    "Anyone who strongly criticises bad movies, should also come forward to appreciate good movies" said Actor and producer Udhayanidhi stalin.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X