மன்னிப்பும் கேட்டுவிட்டு, சும்மா இருக்கும் ஹெச். ராஜாவை ஒரண்டையும் இழுத்த உதயநிதி
Recommended Video

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளதுடன் சும்மா இருக்கும் ஹெச். ராஜாவையும் வம்பிழுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று கமல் ஹாஸன் அறிவித்தார். இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி, கமல் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என விரும்புவதாக விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
விஷாலின் ட்வீட்டை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மச்சா, இது எப்பொழுது நடந்தது என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். பின்னர் அந்த ட்வீட்டை உதயநிதி நீக்கிவிட்டார். அவர் நீக்கினாலும் நெட்டிசன்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துவிட்டனர்.
மன்னிப்பு
முதல்முறையாக விசாரிக்காமல் போட்டோஷாப் புகைப்படத்தை போட்டுவிட்டேன். மன்னிக்கவும். அதை நீக்கிவிட்டேன். என் தவறு தான். அட்மின்கள் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஹெச். ராஜா
ட்விட்டரில் எதையாவது ஏடாகூடமாக போட்டுவிட்டு இது என் அட்மின் செய்த வேலை என்ற புது விஷயத்தை சொல்லிக் கொடுத்தவர் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா. அவரை தான் உதயநிதி கிண்டல் செய்துள்ளார்.
குஷி
ஹெச். ராஜாவை உதயநிதி ஸ்டாலின் கலாய்த்ததில் நெட்டிசன்களுக்கு ஒரே குஷி.
கிராம சபை
நீங்கள் தவறாக ட்வீட் போடுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக நமக்கு நாமே புகைப்படங்களை வெளியிட்டு கிராம சபை புகைப்படங்கள் என்றீர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











