»   »  தெறி டீசரால்....தல-தளபதி ரசிகர்களிடம் சிக்கித் தவித்த உதயநிதி ஸ்டாலின்!

தெறி டீசரால்....தல-தளபதி ரசிகர்களிடம் சிக்கித் தவித்த உதயநிதி ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நள்ளிரவு தெறி டீசர் வெளியான நேரத்தில் விஜய்-அஜீத் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

நேற்றிரவு தெறி டீசர் வெளியான சமயத்தில் வழக்கம் போல விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக் கொண்டனர். இவர்களின் சண்டையால் இணையபூமி கலவர பூமியாக காட்சியளித்தது.

Udhayanidhi Stalin Advice Vijay-Ajith Fans

இதைப் பார்த்த நடிகர் உதயநிதி தனது பாணியில் "ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்கப்பா. ரெண்டு பேருமே நல்ல மனிதர்கள் தான்" என்று கூறினார்.

அவ்வளவுதான் உடனே இரண்டு பேரின் மொத்த ரசிகர்களும் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. அரசியல்ல சண்டை போட்டுக்கறது இல்லையா?

போன்ற கருத்துக்களை அள்ளித் தெளிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் ஒருசிலர் கண்ணா மூச்சி ரேரேன்னு அஜீத் பாடினப்போ இவங்க சிரிச்சாங்க அப்போ நீங்க எங்க போனீங்க? என்று கேள்வி வேறு கேட்டு வைத்தனர்.

அவ்வளவு தான் உடனடியாக உதயநிதி தனது இடத்தை ட்விட்டரிலிருந்து காலி செய்து கொண்டு போய்விட்டார்.இனிமே நீங்க சமாதானம் பேசுவீங்க?

English summary
Yesterday Actor Udhayanidhi Stalin Advice for Vijay-Ajith Fans. He Wrote on Twitter "Rendu teamum sanda pottukkaadhingappa.. Pls..both r good human beings nd v love them for it!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil