''ஆர்டிக்கிள் 15'' தமிழ் ரீமேக்..விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் !

சென்னை : ஆர்டிக்கிள் 15 படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடங்க உள்ளார்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார். ஆயூஷ் மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

அனபவ் சின்ஹா இயக்கத்தில் ஆர்டிக்கிள் 15 வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர் இஷா தல்வார், மனோஸ் பாவ்லா உள்ளிடோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது.

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கெணி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

இந்நிலையில், தமிழகத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டால், மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ள உதயநிதி, ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் அல்லது மே மாத ஆரம்பத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X