அது அவனோட பர்சனல்.. மகன் இன்பநிதியின் பெண் தோழி குறித்து நச்சுனு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : இன்பநிதியின் பெண் தோழியுடனான புகைப்படம் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் நச்சுனு பதிலளித்துள்ளார்.

மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும், ஸ்ரீகாந்த், பிரசாத்,சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். இதில், உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இதைத்தொடர்ந்து அண்மையில், விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி, இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் தன்னுடையை கடைசி திரைப்படம் என்று கூறியிருந்தார்.

அது அவனோட பர்சனல்

அது அவனோட பர்சனல்

இந்நிலையில், நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 17ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதியிடம், மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருந்த புகைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, அவருக்கு 18வயது ஆகிவிட்டது. அவருடைய பர்னல் விஷயத்தில் யாரும் தலையிட முடியாது.

சரியான பதில்

சரியான பதில்

இது எனக்கும், என் மனைவிக்கும், என் மகனுக்குமான விஷயம் இதை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. அரசியல் பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் இது போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அந்த பிரச்சனையை எப்படி கையாள வேண்டும் என்பது அவருடைய பர்சனல். என்னுடைய லிமிட்டை தாண்டி நானே அந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை, இது அவருக்கான சுதந்திரம் என மகனின் புகைப்பட சர்ச்சைக்கு நச் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

கதை பிடித்து இருந்தது

கதை பிடித்து இருந்தது

மேலும், கண்ணை நம்பாதே படத்தில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, 2018ம் ஆண்டு அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது தான் மாறனை அழைத்து பாராட்டினேன். அப்போ அவர் உங்களுக்கு ஒரு கதை இருக்கு என்று ஒரு காதல் கதையை என்னிடம் சொன்னார். ஆனால், காதல் கதை வேண்டாம், த்ரில்லிங் கதை வேண்டும் என்று சொன்னேன், அதன் பிறகுதான் இந்த கதையை கூறினார், கதை பிடித்து இருந்ததால், இந்த படத்திற்கு ஓகே சொன்னேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X